வீட்டில் பணம் தங்க வேண்டுமா? கடைபிடிக்க வேண்டிய 10 பரிகாரங்கள்
இந்த உலகத்தில் என்னதான் சுய முயற்சியோடு நாம் செயல் பட்டு வெற்றி கண்டாலும் தன்னடக்கமும் இறைவனுடைய பரிபூரண அருளும் இருந்தால் மட்டுமே நாம் சம்பாதித்த பெயர் புகழ் எல்லாம் நிலையானதாக இருக்கும். அந்த வகையில், வீடுகளில் பணம் தங்க வேண்டும் தங்குவதற்கு பின்பற்ற வேண்டிய 10 பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.
வீடுகளில் மாலை நேரங்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது என்பது மிகவும் மங்களகரமானதாக இருக்கிறது.
அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தேவிக்கு மலர்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்வது செல்வ வளத்தை நமக்கு கொண்டுவந்து சேர்க்கும்.

வீடுகளில் தேவை இல்லாத பொருட்களை சேர விடாதீர்கள். உடைந்த பொருட்கள் ஆகியவற்றை உடனடியாக அகற்றி விடுங்கள்.
பூஜை அறையை எப்பொழுதும் சரியாக பராமரித்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் தேவையில்லாத பொருட்களை சேர்த்து வைக்காதீர்கள்.
வீடுகளில் துளசி செடி இருந்தால் அதை சரியாக பராமரித்து துளசி செடிக்கும் மரியாதை செலுத்தி வழிபாடு செய்வது அவசியமாக இருக்கிறது. இது நமக்கு மகாலட்சுமி தேவியின் பரிபூரண அருளை பெற்று கொடுக்க உதவும்.
பணத்தை எப்பொழுதும் மரியாதை உடன் கையாளப் பழகிக் கொள்ள வேண்டும். பணத்தை சேமித்து வைக்கவும் சரியான இடத்தில் வைப்பது அவசியம்.
வீடுகளில் உணவுகளை வீணாக்காமல் அதனுடைய மதிப்பு உணர்ந்து தேவையான அளவு சாப்பிட்டு வீணாக்காமல் இருப்பது அவசியம்.

குலதெய்வ வழிபாடுகளை எப்பொழுதும் தவற விடக்கூடாது. தானம் அன்னதானம் செய்வது மிகவும் நற்பலன்களை கொடுக்கும்.
வருமானத்தில் ஒரு பகுதியாவது சேர்த்து வைக்க பழகிக் கொள்ள வேண்டும். தேவையில்லாத செலவுகளை குறைத்து ஒவ்வொரு மாதமும் சிறிதளவாது சேமிக்க துவங்க வேண்டும்.
இவையெல்லாம் ஒரு ஒழுக்கமான முறை இவை நம்முடைய மனநிலைக்கு வாழ்க்கைக்கும் நேர்மறை மாற்றம் கொடுக்கும் என்றாலும் இதுவே நமக்கு இறைவனுடைய பரிபூரண அருளையும் பெற்றுக் கொடுக்க உதவியாக இருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |