இந்திரன் மகாலட்சுமியின் அருளைப் பெற பாடிய சக்தி வாய்ந்த மஹாலட்சுமி மந்திரம்
மனிதர்களுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு விஷயம் செல்வம். என்னதான் நமக்கு நல்ல குடும்பம், மன அமைதி என எல்லாம் இருந்தாலும், செல்வ வளம் இல்லை என்றால் இவையெல்லாம் படிப்படியாக சில நேரங்களில் குறைய தொடங்குகிறது.
மேலும், சமுதாயத்தில் மதிப்பான வாழ்க்கை வாழ்வதற்கும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இறைவனுடைய அருளோடு சேர்ந்து நமக்கு ஒரு நிலையான செல்வம் என்பது அவசியமாக உள்ளது. அப்படியாக இந்திர பகவான் மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு பாடிய ஒரு சக்தி வாய்ந்த மந்திரம் உள்ளது.
இந்த மந்திரத்தை நாம் பாராயணம் செய்கின்ற பொழுது நமக்கு மகாலட்சுமியின் பரிபூர்ண அருளோடு நம்முடைய வீடுகளில் மகாலட்சுமியின் அருளால் நிலையான செல்வமும் மன அமைதியும் கிடைக்கிறது.

இந்திர கிருத லட்சுமி ஸ்தோத்திரம்:
ஸஸ்யாதிஷ்டாத்ரு தேவ்யை ச ஸஸ்யலக்ஷ்ம்யை நமோ நம꞉!
நமோ புத்தி ஸ்வரூபாயை புத்திதாயை, நமோ நம꞉!!
இந்த மந்திரத்தினுடைய பொருள் விவசாயத்தையும் பயிர்களையும் செழிக்க செய்யக்கூடிய தானிய லட்சுமியாக விளங்கும் தேவியே உங்களுக்கு நமஸ்காரம்.
நல்லறிவையும் ஞானத்தையும் வழங்கக்கூடிய தாயாக இருக்கும் லட்சுமி தேவியே உங்களை போற்றி வணங்குகின்றோம் என்பது ஆகும். இதனை நாம் தினமும் பாராயணம் செய்கின்ற பொழுது மகாலட்சுமி மணமகிழ்ந்து நமக்கு அவர்களுடைய அருளாசி கிடைக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |