முருகப்பெருமானுக்கு பிடித்த முக்கியமான ராசிகள் யார்? உங்கள் ராசி உள்ளதா?
முருகப்பெருமானை மனம் உருகி வழிபாடு செய்ய நிச்சயம் முருகப்பெருமான் எல்லா நிலையிலும் பக்தர்களுடன் இருந்து அவர்களை காப்பாற்றுவார். பக்தர்களுடைய துயரை கண்டு பொறுக்க முடியாத முருக பெருமான் நிச்சயம் அவர்கள் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும் ஒரு பாதுகாப்பையும் வழங்க கூடியவர்.
அப்படியாக, முருகப்பெருமானுக்கு ஜோதிட ரீதியாக ஒரு சில ராசிகள் மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினர் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தை பெற்ற மேஷ ராசியினர் இயல்பாகவே வீரம், கோபம் அதிக ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள். அசுரர்களை எதிர்த்து போர் செய்து தேவர்களை காத்த முருகப்பெருமானின் வீர திருக்கோலத்துடன் இவர்களுடைய குணங்களை நாம் பொருத்திப் பார்க்கலாம்.
ஆகையால், மேஷ ராசியினருக்கு முருகப்பெருமான் வழிபாடு என்பது மன உறுதியும் தடைகளை அகற்றி ஒரு நல்ல வாழ்க்கையும் கொடுக்கிறது. இவர்கள் தொடர்ந்து முருக பெருமானுடைய கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வந்தால் நிச்சயம் தொழிலிலும் வாழ்க்கையிலும் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெறலாம்.
கடகம்:
சந்திர பகவானின் ஆதிக்கத்தை கொண்ட இவர்கள் மனம் மற்றும் உணர்வுகள் குடும்ப பாசம் ஆகியவை கொண்டு இருக்கிறார்கள். முருகப்பெருமான் பக்தர்களுக்கு கருணை கடலாக விளங்க கூடியவர். தந்தையான சிவபெருமானுக்கே பிரணவத்தின் பொருளை உணர்த்திய ஞான குருவாகவும் போற்றப்படுகிறார்.
ஆதலால் முருகனின் கருணை மற்றும் ஞானத் தன்மைகளை நாம் கடக ராசியிடம் பார்க்க முடியும். மேலும், இவர்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்ய மன அமைதி குடும்பத்தில் நன்மை கிடைக்கும். இவர்கள் சுவாமிமலை சுவாமிநாத முருகப்பெருமானை குரு வடிவத்தை நினைத்து தியானம் செய்வது குடும்பம், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.

கும்பம்:
கும்ப ராசியின் அதிபதி சனி பகவானாக இருக்கிறார். இவர்கள் ஒழுக்கம், பொறுமை கடின உழைப்பு, பொறுப்புணர்வு ஆகியவை இயல்பாகவே இருக்கும்.
மேலும், இவர்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்வது எதையும் பொறுமையுடன் செயல்படுத்தவும் கடமைகளில் உறுதியாக இருக்கவும் உதவியாக இருக்கிறது. இவர்கள் பழனி தண்டாயுதபாணியை நினைத்து தியானம் செய்வதும், பிறருக்கு உதவுவதும் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் நல்ல மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |