யுகாதி பண்டிகை கொண்டாடும் முறை
நம்மில் பலரும் யுகாதி பண்டிகையும் சங்கராந்தியும் ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால், இரண்டு பண்டிகைகளும் வெவ்வேறு பண்டிகை ஆகும்.
யுகாதி என்பது தெலுங்கு மக்களின் புத்தாண்டாகும், சங்கராந்தி என்பது தெலுங்கு மொழி பேசும் மக்களின் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது.
அவர்கள் புதிதாக விளைந்த நெல்மணிகளை அறுவடை செய்து அந்த விளைச்சலை இறைவனுக்கு படைக்கும் நாளையே சங்கராந்தி பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
மேலும், யுகாதி பண்டிகை என்பது தெலுங்கு கன்னடம் மொழி பேசும் மக்களின் புத்தாண்டாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகை இந்தியாவின் வட மாநிலங்களில் பலராலும் பல பெயர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
புராணங்களின்படி, இந்த நாளில் தான் படைத்தல் தொழிலின் கடவுளாக கருதப்படும் பிரம்ம தேவர் உலக உயிர்களைப் படைத்து அவர்களின் தலையெழுத்தை, எழுத துவங்கியதாக சொல்லப்படுகிறது.
ஆதலால் மனிதர்கள் வாழ்க்கையில் சுவைக்க வேண்டிய முக்கியமான இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, விருப்பு வெறுப்பு என அனைத்தும் ஒரே மனநிலையுடன் நாம் கையாளும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில் யுகாதி என்று காலையிலே அறுசுவைகள் அடங்கிய பச்சடியை இறைவனுக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்து மதத்திலும் மிக முக்கியமான பண்டிகைகள் ஒன்றாக யுகாதி கொண்டாடப்படுகிறது. இந்த யுகாதி பண்டிகை அன்று காலையிலே அறுசுவைகள் அடங்கிய பச்சடியை இறைவனுக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்நன்னாளில் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரிடமும் மகிழ்ச்சியும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டு வாழ்க்கையில் அறுசுவைகளையும் ஒன்றாக பெற்று நம் வாழ்க்கையில் நலம் பெறுவோமாக!!!
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |