இந்த ராசியில் பிறந்தவர்கள் ஒருவரை ஏமாற்றுவதில் சாமர்த்தியசாலிகளாம்
ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான தன்மை இருக்கிறது. அந்த வகையில், ஒரு சில ராசிகள் அவர்களுடைய சமர்த்தியதால் ஒருவரை தன் வசம் செய்யக்கூடியவராக இருக்கிறார்கள்.
அப்படியாக, எந்த ராசியில் பிறந்தவர்கள் மிக எளிதில் ஒருவரை திசை திருப்பக் கூடிய திறன் கொண்டவர்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
மிதுனம்:
இவர்களுக்கு எப்பொழுதும் இரட்டை குணம் இருக்கும். வார்த்தைகளால் ஒருவரை எளிதில் மயக்கி விடுவார்கள். அதை போல், உண்மையை மறைத்து பொய்யை பேசுவதில் இவர்கள் வல்லவர்கள் என்பதால் இவர்களிடம் பலரும் பல நேரங்களில் ஏமாற்றம் அடைவதுண்டு.

விருச்சிகம்:
இவர்கள் எப்பொழுதுமே அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை வெளியே காட்டவே மாட்டார்கள். ஒருவரை பலி வாங்குவதற்காகவோ அல்லது காரியம் சாதிக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் அதை திட்டமிட்டு செய்து முடித்து விடுவார்கள். அதே போல், எதிரியின் மனதில் என்ன இருக்கிறது என்பதையும் இவர்கள் எளிதில் தெரிந்து கொள்வார்கள்.
துலாம்:
இவர்கள் பார்ப்பதற்கு மிகவும் அமைதியாகவும் எல்லோரிடத்திலும் எளிதாக பழகக் கூடியவர்களாக இருந்தாலும் சுயநலம் சற்று அதிகம் இருக்கும். இவர்களுடைய தேவைக்காக இவர்கள் சாதகமான சூழலை அமைத்துக் கொள்வதில் வல்லவர்கள். அதேபோல், சண்டையை தவிர்ப்பதற்கும் பல உண்மைகளை மறைத்து விடுகிறார்கள்.