பொதுவாக ராசிபலன்கள் கிரக மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன.
ஜோதிட சாஸ்திரப்படி, பொய் சொல்லும் குணம் கொண்ட மூன்று ராசிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
நடக்காத ஒரு விடயத்தை நடந்தது போல் கதையை மாற்றிக் கூறுவதில் இவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.
அப்படியான ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பொய்யை சரளமாக பேசக்கூடியவர்கள்
1. மிதுன ராசிக்காரர்கள்
மற்ற ராசிகளை விட மிதுன ராசியில் பிறந்தவர்கள் பொய் சொல்வதில் தேர்ச்சிப் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் மற்றவர்களை ஏமாற்றும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மிதுன ராசிக்காரர்கள் கூறுவது பொய்யா? மெய்யா? என கண்டுபிடித்து கொள்ளாத அளவிற்கு பொய் கூறுவார்கள். இவர்களிடம் மற்ற ராசிக்காரர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
2. துலா ராசிக்காரர்கள்
வசீகரமான முகம் மற்றும் மகிழ்ச்சிக்கான வார்த்தை பிரயோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பேசுவது முழுவதும் பொய் என யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு ஏதாவது வேண்டும் என முடிவு செய்து விட்டால் அதனை பெற்றுக் கொள்வதற்கான எந்த எல்லைக்கும் செல்வார்கள். நேரமும் இவர்களுக்கு சாதகமாக வேலைச் செய்யும். எனவே இவர்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
3. மீன ராசிக்காரர்கள்
பொய் சொல்வது தவறில்லை. ஆபத்திற்கு ஒரு பொய் சொல்லலாம் மாறாக வாழ்க்கையே பொய்யாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. பார்ப்பதற்கு அப்பாவியாக இருக்கும் இந்த ராசிக்காரர்கள் பொய்யுடனே வாழ்க்கை நடத்துவார்கள். முன்கூட்டியே என்ன பொய் கூறலாம் என யோசித்து கொள்வார்கள்.
முக்கியமாக, இந்த ராசியுடன் பழகும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், செய்யாத தவறுக்கு இவர்களால் நீங்கள் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |