தோல்வியை அடியோடு வெறுக்க கூடிய ராசிகள் யார் தெரியுமா?
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். அந்த வகையில், ஒரு சில ராசிகளுக்கு தோல்வி என்பதே பிடிக்காது. அப்படியாக, எந்த ராசியினர் தோல்வியை அடியோடு வெறுக்க கூடிய ராசியினர் என்று பார்ப்போம்.
சிம்மம்:
இவர்களுக்கு தோல்வி என்றால் சுத்தமாக பிடிக்காத ஒன்று. முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதுமட்டுமில்லாமல் தோல்வியை அவர்கள் அவமானமாக எடுத்துக் கொள்ளக் கூடியவர்கள் என்பதால் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்று நினைக்ககூடியவர்கள்.
விருச்சகம்:
இவர்கள் தோல்வியை சகித்துக் கொள்ளவே முடியாத நிலையில் இருக்கிறார்கள். நான் மட்டுமே உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்கின்ற ஒரு எண்ணம் இவர்களிடத்தில் அதிகம் இருக்கும். இவர்கள் ஒரு வெற்றியை அணுகும் வரை அதனை திரும்பத் திரும்ப முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.

மிதுனம்:
இந்த நபரை பொறுத்தவரை இவர்களுக்கு இவரை விட யாரும் அறிவாளியாக இருந்துவிட்டால் நிச்சயமாக பிடிப்பதில்லை. இவர்கள் வெற்றி பெறும் வரை முயற்சி செய்வார்கள். இவர்களுடைய அறிவை இவர்கள் அதிகமாக நம்பக் கூடியவர்கள்.
மகரம்:
இவர்களுக்கு தோல்வி ஏற்பட்டாலும் இவர்கள் கவலை கொள்ளாமல் மீண்டும் எழுந்து போராடக் கூடியவர்கள். எந்த இடத்தில் இவர்கள் தோல்வியை சந்தித்தார்களோ அதே இடத்தில் மீண்டும் எழுந்து போராடி ஜெயித்து காட்ட வேண்டும் என்கின்ற ஒரு பிடிவாதம் இவர்களிடத்தில் நாம் பார்க்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |