வாழ்க்கையில் அதிக அளவில் துரோகத்தை சந்திக்கும் ராசிகள் யார் தெரியுமா?
இந்த பூமியில் மனிதர்கள் பல வகையான குணங்களோடு இருக்கிறார்கள். யார் எப்பொழுது எப்படி மாறுவார்கள் என்று நமக்கு தெரியாத ஒரு புதிராகவே இருக்கிறது.
அந்த வகையில் ஒரு மனிதன் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு துயரம் என்றால் கட்டாயம் நெருங்கிய நபர் நமக்கு செய்யக்கூடிய துரோகமாகவே இருக்கிறது. அப்படியாக எந்த ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் அதிக அளவில் துரோகத்தை சந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள் என்று பார்ப்போம்.

கடகம்:
கடக ராசி பொருத்தவரை எல்லோரையும் எளிதாக நம்பி விடுவார்கள். மேலும் ஒருவரை நம்பி விட்டால் அவர்களுக்காக எதையும் செய்யத் துணிபவர்கள். இவர்களுக்கு எதிரே இருக்கக்கூடிய நபர்கள் இவர்களுக்கு துரோகம் செய்கிறார்கள் என்பது தெரிந்தும் இவர்கள் அதை கவனிக்க பல நேரங்களில் தவறி விடுகிறார்கள்.
ஆதலால், காலம் கடந்தே இவர்கள் தனக்கு நெருங்கியவர்கள் தீங்கு செய்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து மிகவும் காயப்படுபவர்களாக இருக்கிறார்கள் . இருப்பினும் இவர்கள் துரோகம் செய்தவர்களையும் மன்னித்து ஏற்கக்கூடிய மன நிலை கொண்டிருக்கிறார்கள்.
துலாம்:
துலாம் ராசியினர் இந்த பூமியில் பிறந்த எல்லோரும் நல்லவர்கள் என்று எண்ணக் கூடியவர்கள். ஆதலால் ஒருவரிடம் பழகும் பொழுது அவர்களுடைய தீய செயல்களை இவர்கள் பார்க்க தவறி விடுகிறார்கள். அதன் விளைவாக இவர்கள் பல நேரங்களில் நெருங்கியவர்களிடம் பல துரோகங்களை சந்திக்க வைக்கிறது.
துலாம் ராசியினர் பொறுத்த வரை குடும்பத்தினர் கூட இவர்களுக்கு சில நேரங்களில் துரோகம் செய்துவிடக் கூடிய நிலையை நாம் பார்க்கலாம். காரணம் இவர்கள் மிகவும் நல்லவர்களாக இருப்பதே பலரும் இவர்களை பயன்படுத்திக் கொள்ளக்கூடிய நிலைக்குத் தள்ளுகிறது.
மகரம்:
மகர ராசியை பொருத்தவரை இவர்கள் எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். யாரிடமும் வேறுபாடு பாராமல் உதவி செய்யக் கூடியவர்கள். இதை பல நேரங்களில் பலரும் தவறாக பயன்படுத்திக் கொண்டு செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
மேலும், இவர்களின் நெருங்கிய நண்பர்கள் தான் இவர்களுடைய வளர்ச்சி மற்றும் நல்ல செயல்களை பார்க்க பொறுக்காமல் துரோகம் செய்து விடுகிறார்கள். அதை எல்லாம் கடந்து செல்லக்கூடிய ஆற்றலையும் பெற்று இருப்பதால் எளிதில் மீண்டு விடுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |