2026 மாசி மகம் எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்?

By Sakthi Raj Feb 18, 2026 04:42 AM GMT
Report

மாசி மாதம் பல வழிபாட்டிற்கு மிக உகந்த மாதமாகும். மேலும், சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மாதம் இந்த மாசி மகாசிவராத்திரி என்று சிவனே அன்னை பார்வதி தேவியிடம் சொல்லியிருக்கிறார். மாசி மாதத்தில் வரக்கூடிய முக்கியமான பண்டிகைகளில் மாசி மகம் ஒன்று

அதாவது மாசி மாதத்தில் வரக்கூடிய மக நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து வருகின்ற தினத்தை மாசி மகம் என்று கொண்டாடுகிறார்கள். இந்த வழிபாடு கோவில்களில் மட்டும் அல்லாமல் நீர் நிலைகளிலும் பக்தர்கள் ஒரு விழா போல் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

மேலும் இந்த மாசி மகம் அன்று நீர் நிலைகளான ஆறுகள், ஏரிகள், கடற்கரை என்று அனைத்து நீர் நிலைகளிலும் தெய்வீக சக்தி அதிகரித்து காணப்படும் என்று கருதப்படுகிறது.

இந்த நாளில் பெரும்பாலான கோவில்களில் தீர்த்தவாரி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். அதாவது நீர் நிலைகளில் தெய்வீகத்தன்மை அதிகம் உள்ளதால் தெய்வங்களே தங்களின் ஆற்றலை புதுப்பிக்கும் நாளாகவும் இந்த மாசி மகம் கருதப்படுகிறது.

2026 மாசி மகம் எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்? | When Is 2026 Masi Magam And How To Worship

உங்கள் கர்ம வினைகளில் இருந்து விடுபட இதை மட்டும் செய்யாதீர்கள்

உங்கள் கர்ம வினைகளில் இருந்து விடுபட இதை மட்டும் செய்யாதீர்கள்

தமிழ்நாட்டில் கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி போன்ற கடலூர் மாவட்டங்களில் மாசி மகம் விழா வெகு சிறப்பாக பக்தர்களால் கொண்டாடப்படுவது வழக்கம். ஆன்மீக மரபுகளின் படி மாசி மகம் நாளில் முப்பது முக்கோடி தேவர்களும் பக்தர்களை ஆசிர்வாதம் செய்வதற்காக பூமிக்கு வரும் நாளாக கருதப்படுகிறது.

அதனால் இந்த நாளில் நாம் புதிய விஷயம் தொடங்குதல், தர்ம காரியங்கள் செய்தல் குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்ற எந்த விஷயங்கள் செய்தாலும் அவை தெய்வீக அருளால் பல மடங்கு சந்தோஷத்தை பெறுகிறது என்று சொல்கிறார்கள்.

மேலும், மாசி மகம் அன்று கோவில்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் ஊர்வலமாக சாமி சிலைகள் எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் தீர்த்தவாரி நடத்தி சிறப்பாக கொண்டாடுவார்கள். இவ்வாறு நீர் நிலைகளில் தெய்வங்கள் நீராடும் நேரத்தில் நாமும் தீர்த்தங்களில் புனித நீராடினால் நம்முடைய கர்ம வினைகள், பாவங்கள், திருஷ்டி, தோஷங்கள் யாவும் விலகும்.

அதோடு குடும்பத்தில் சந்திக்கின்ற பொருளாதார கஷ்டங்கள் அமைதியின்மை எல்லாம் ஒரு நல்ல முடிவுக்கு வரும். இப்படியாக, இந்த ஆண்டு மாசி மகம் மார்ச் 2ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் காலை 8. 17 மணி முதல் மார்ச் 3 காலை 8.17 மணி வரை மகம் நட்சத்திரம் இருக்கிறது.

2026 மாசி மகம் எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்? | When Is 2026 Masi Magam And How To Worship 

2026: மகா சிவராத்திரியில் நடக்கும் சக்தி வாய்ந்த கிரக பெயர்ச்சி.. கட்டாயம் இது நடக்குமாம்

2026: மகா சிவராத்திரியில் நடக்கும் சக்தி வாய்ந்த கிரக பெயர்ச்சி.. கட்டாயம் இது நடக்குமாம்

அதனால் மார்ச் 2ஆம் தேதி அன்று மாலை 6. 29 மணிக்கு தான் பௌர்ணமி தொடங்குகிறது. மார்ச் மூன்றாம் தேதி அன்று மாலை 5. 52 வரை பௌர்ணமி திதி இருக்கிறது. நாம் மகம் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே கொண்டாட கூடிய விழா மாசி மகம் என்பதால் மார்ச் இரண்டாம் தேதி தான் மாசி மகம் தினமாக கருதப்படுகிறது.

மாசிமகம் அன்று தெய்வங்களின் ஆசிர்வாதம் பெறுவதுடன் முன்னோர்களின் அருளையும் நாம் பெற சிறப்பானதாகும். புராணங்களின்படி அன்னை பார்வதி தேவி தட்சணின் மகளாக அவதரித்தது மாசி மகம் நாளில் தான் என சொல்லப்படுகிறது.

அதனால் இந்த நாளில் அம்பிகையை வழிபாடு செய்தால் திருமண தோஷம் விலகும் என்று நம்பப்படுகிறது. அதனால் இந்த மாசி மக தினத்தை நாம் தவறவிடாமல் இறைவழிபாடு செய்தும், முடிந்தவர்கள் நீர் நிலைகளில் நீராடி வழிபாடு செய்து இறைவனின் பரிபூர்ண அருள் பெறுவோம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US