முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த 10 மந்திரங்களும் அதன் பலன்களும்
Report this article
முருகன் என்றாலே துயர் துடைப்பவர் ஆவார். முருகப்பெருமானுக்கு உலகில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம். அப்படியாக முருகப்பெருமான் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்வது என்பது சிறந்த பலனை கொடுக்கும்.
அதில் முருகருக்கு என்று முக்கியமான சில மந்திரங்கள் இருக்கிறது. அதை சொல்லி வழிபாடு செய்ய நாம் எண்ணற்ற அதிசய பலன்களை பெறலாம். அதை பற்றி பார்ப்போம்.
1.ஓம் சரவண பவ - பாதுகாப்பும், முருகன் அருளும் கிடைக்கும்.
2.ஓம் ஷண்முகாய நமஹ - ஆன்மிக வளர்ச்சியும், ஞானமும் கிடைக்கும்.
3.ஓம் முருகனே நமஹ - அனைத்து நலன்களும், செல்வ வளமும் கிடைக்கும்.
4.வேலவா வேலவா - வெற்றி கிடைக்கும்
5. ஓம் குமாராய நமஹ - ஆரோக்கியம், மகிழ்ச்சி கிடைக்கும்.
6.ஓம் கந்தாய நமஹ - வலிமையும் உற்சாகமும் கிடைக்கும்.
7.ஓம் சுப்ரமண்யாய நமஹ - தடைகள் விலகும்.
8. ஓம் வேலாயுதாய நமஹ - வேகமும், வளர்ச்சியுமண ஏற்படும்.
9. ஓம் சுவாமிநாதாய நமஹ - முருகனின் கருணையும் ஆசியும் கிடைக்கும்.
10. ஓம் சரவணபவ ஸ்ரீ முருகனே நமஹ - அளவில்லாத பாதுகாப்பும், அருளும் கிடைக்கும்.
மேற்கண்ட மந்திரங்கள் எல்லாம் மிகவும் எளிமையான மற்றும் சக்தி வாய்ந்த மந்திரங்கள். இதை நாம் தினமும் 108 முறை வழிபாடு செய்யும் பொழுது உச்சரிப்பது நல்ல பலனை கொடுக்கும். முடிந்தவர்கள் இதில் உங்களுக்கு வாழ்க்கைக்கு உகந்த மந்திரத்தை 108 முறை எழுதி வழிபாடு செய்ய வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |