மிகவும் சக்தி வாய்ந்த 10 வகை திருஷ்டி கழிக்கும் முறை

By Sakthi Raj Mar 17, 2025 08:41 AM GMT
Report

 ஒரு மனிதனுக்கு ஏற்பட கூடாது துன்பங்களில் திருஷ்டியும் ஒன்று. இந்த திருஷ்டியானது ஒரு மனிதனை பல விதமான பாதிப்புகள் அடைய செய்கிறது. அந்த திருஷ்டி கழிக்க வீடுகளில் நாம் சில முறைகள் பின்பற்றுவது உண்டு. அப்படியாக, திருஷ்டி சுற்றுவதில் பல வகைகள் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

1. உப்பு சுற்றி போடுதல்:

திருஷ்டி கழிப்பதற்கு இந்த கல் உப்பு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. திருஷ்டி கழிக்க கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்து வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றி நீரில் கரைக்க வேண்டும். இவ்வாறு செய்ய நம்முடைய திருஷ்டி கழிந்து விடும் என்பது நம்பிக்கை.

2. சிகப்பு மிளகாய் சுற்றி போடுதல்:

எப்பேர்ப்பட்ட திருஷ்டியும் இந்த சிவப்பு காய்ந்த மிளகுவிற்கு முன் அடிபட்டு விடும். அப்படியாக, சிகப்பு மிளகாயை கையில் எடுத்து வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றி நெருப்பில் போட திருஷ்டி கழியும். இவ்வாறு சிவப்பு மிளகாய் சுற்றும் பொழுது திருஷ்டி இருந்தால் மிளகாய் கமறாது, ஆனால் திருஷ்டி இருந்தால் மிளகு கமறும்.

3. கற்பூரம் ஏற்றுதல்:

திருஷ்டி கழிக்கும் முறையும் மிகவும் எளிமையான முறை இந்த கற்பூரம் சுற்றி வைப்பது. வீட்டில் அனைவரும் உட்கார வைத்து கற்பூரம் எடுத்து கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றி, வீட்டு வாசலில் ஏற்ற நம்முடைய திருஷ்டி வாசலோடு எரிந்து விடும் என்பது நம்பிக்கை.

4. படிகாரம் சுற்றுதல்:

மிளகாய் சுற்றுவது போலத்தான் இதுவும். திருஷ்டி இருந்தால் நெருப்பில் போடப்பட்ட படிகாரம் ஒரு பொம்மை மாதிரி மாறிவிடும்.

தமிழ் நாட்டில் உள்ள முக்கிய கோயில்களும் அதன் அதிசயங்களும்

தமிழ் நாட்டில் உள்ள முக்கிய கோயில்களும் அதன் அதிசயங்களும்

5. கருப்பு வளையல்:

குழந்தைகளுக்கு மிக எளிதில் திருஷ்டி பாதிப்பு ஏற்படும். அப்படியாக பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கருப்பு வளையலை ஆரத்தியுடன் சேர்த்து சுற்றிபோட திருஷ்டி விலகும்.

6. காலடி மண்:

திருஷ்டி சுற்றுவதில் மிகவும் சக்தி வாய்ந்ததாக இது கருதப்படுகிறது. அதாவது காலடி மண்ணை கையிலெடுத்து திருஷ்டி சுற்றி அதில் எச்சிலை 3 முறை துப்பச்செய்து வெளியில் எறிய எப்பேர்ப்பட்ட மோசமான திருஷ்டியும் விலகிவிடும்.

7. எலுமிச்சை குங்குமம்:

வியாபார ஸ்தலங்களுக்கும், வாகனம், வீடு முதலியவற்றுக்கும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை தடவி வாசல் வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிய திருஷ்டி விலகும்.

8. தேங்காய் உடைத்தல்:

தேங்காய் உடைத்து திருஷ்டி கழிப்பது போன்று சக்தி வாய்ந்த திருஷ்டி எதுவும் இல்லை. குடும்பத்திற்கே திருஷ்டி கழிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் தேங்காயின் மேல் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும்.

9. பூசணிக்காய் உடைத்தல்:

வீடுகளில் சுபநிகழ்ச்சி நடக்கும் பொழுது இந்த பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழிப்பது சிறந்த பலனை கொடுக்கும். பூசணிக்காயில் குங்குமத்தையும் சில்லறை காசுகளையும் போட்டு கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும்.

10. ஆரத்தி:

கல்யாணம் மற்றும் பூஜை போன்ற முக்கிய நிகழ்வுகள் நடக்கும் நேரத்தில் ஆரத்தி எடுக்கும் வழக்கம் காலம் காலமாக கடைபிடிக்க பட்டு வருகிறது. இதுவும் ஒரு விதமான திருஷ்டி கழித்தல் ஆகும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US