தமிழ் நாட்டில் உள்ள முக்கிய கோயில்களும் அதன் அதிசயங்களும்
இந்த உலகமே அதிக அதிசியங்கள் நிறைந்தது. அப்படியாக, நம்முடைய தமிழ் நாட்டில் இருக்கும் கோயில்களுக்கு பின்னால் ஒவ்வொரு வரலாறும், சிறப்பம்சங்களை இருக்கிறது. அப்படியாக, தமிழ் நாட்டில் உள்ள முக்கிய கோயில்களுக்கு பின்னால் அமைந்து இருக்கும் அதிசியங்களை பற்றி பார்ப்போம்.
1.திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சத்யவாஹுஸ்வரர் ஆலயத்தில் வருடத்தில் 6 நாட்கள் மட்டும் சூரிய ஒளி சுவாமி மீது விழுவது குறிப்பிடத்தக்கது.
2. சீர்காழியில் சட்டை நாதர் கோயில் மிகவும் பிரபலம். இங்கு அஷ்ட பைரவர் என்னும் 8 பைரவருக்கு ஒரே இடத்தில் சன்னதி உள்ளது.
அதே போல், இந்த அஷ்ட பைரவர் சன்னதியானது வெள்ளிக்கிழமை மட்டும் தான் திறக்கப்படும். மேலும், இந்த கோவிலில் இன்னொரு சிறப்பு, 27 நட்சத்திரங்களுக்கும் மரங்களை வளர்த்து வருகின்றனர்.
3. சேலம் மாவட்டம் , அரியனூர் எனும் இடத்தில், ஒரு சிறிய மலையில், 1008 சிவலிங்கங்கள் உள்ள ஒரு கோயில் உள்ளது. இங்கு இருக்கும், அந்த 1008 லிங்கத்திற்க்கும் ஒரு தனி பெயர் உள்ளது.
4. ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதப்பெருமாள் கோயிலில் தேங்காய் உடைக்கும் பழக்கம் இல்லை. காரணம், பாம்பணையில் ரங்கன் துயில் கொண்டு இருப்பதால், தேங்காய் உடைத்தால் அந்த சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் (உலகத்தில் நடக்கும் எல்லாவற்றையும் அறிந்தபடியே உறங்குதல்) கலைந்துவிடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகப் படைக்கிறார்கள்.
6. சேலம் காசி விஸ்வநாதர் கோயிலில் முழுதும் ருத்ராட்சத்தால் ஆன தேர் ஒன்று உள்ளது.
7. உலகின் தோன்றிய முதல் சிவலிங்கம், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் பாபநாசநாதர் கோயிலில் உள்ள சிவலிங்கம் ஆகும்.
8. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் எனும் ஊரில்ஸ்ரீ அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் உள்பிரகாரத்தில்அமைந்துள்ள நந்தீஸ்வரர். ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாதம், 3ம் தேதியன்று, சூரிய ஒளியானது, கோவிலின் ராஜகோபுரம் மீது பட்டு, பின், நந்தீஸ்வரர் மீது விழுகிறது. அந்த நேரம் நந்தீஸ்வரர் தங்க நிறமாக காட்சி அளிப்பார்.
9. சிவகங்கை மாவட்டம், பிரான்மலை என்னும் ஊரில் உள்ளது அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில். இவருக்கு ஒருமுறை அணிந்து பூஜை செய்யும் ஆடையை மறுமுறை அணிவிப்பது இல்லை.
ஒவ்வொரு முறையும் புதிய ஆடையே அணிவிக்கிறார்கள். இத்தலத்தில் தெட்சிணாயண புண்ணிய காலம் முடியும் கடைசி மூன்று மாதங்களிலும்,உத்தராயண புண்ணிய காலம் துவங்கிய முதல் மூன்று மாதங்களும் என தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் (ஐப்பசி முதல் பங்குனி வரையில்), சிவன் மீது சூரிய ஒளி விழுகிறது.
இவ்வாறு சூரிய ஒளி இறைவன் மீது விழுவதைக் காண்பது அபூர்வம். அதே போல் இக்கோயிலில் இன்னொரு அதிசயம், இத்தலத்தின் தல விருட்சம் உறங்காப்புளி மரமாகும். இது பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரமாகும்.
இம்மரத்தில் பூக்கும், காய்க்கும். ஆனால், பழுக்காது. காய்ந்த நிலையிலேயே புளியங்காய், கீழே உதிர்ந்து விடும். இதன் இலைகள் எப்போதும் விரிவடைந்த நிலையிலேயே இருக்கும்.
10. மதுரை மாவட்டம் திருவேடகம் என்னும் ஊரில் அமைந்து உள்ளது அருள்மிகு ஏடகநாதசுவாமி திருக்கோயில். சுவாமி சன்னதியில் இரண்டு துவார பாலகர்கள் பாதுகாப்பாக நிற்பர்.அம்மன் சன்னதியில் துவார பாலகியர் இருப்பர்.
ஆனால், இங்குள்ள ஏலவார்குழலியம்மன் சன்னதியில் இரண்டு துவாரபாலகர்கள் காவலுக்கு நிற்கின்றனர். இது வித்தியாசமான அமைப்பாக உள்ளது. திருவேடகத்தில் சிவராத்திரியன்று நான்காம் ஜாம கால பூஜையில், பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது.
காசியிலும் சிவராத்திரியின் நான்காம் ஜாம கால பூஜை பைரவருக்கு நடத்தப்படும். அதே அடிப்படையில், இந்தக் கோயிலிலும் காலபைரவருக்கு பூஜை நடப்பது சிறப்பானது. இந்த பூஜையைக் காண்பவர்கள் அஸ்வமேதயாகம் செய்த பலனை அடைவர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |