தமிழ்நாட்டில் உள்ள கோயில்களும் அதில் மறைந்து உள்ள அதிசயங்களும்
நாம் தமிழ்நாடு ஆன்மீக பூமீ என்று தான் சொல்ல வேண்டும். அப்படியாக, அந்த கோயில்களில் பல அதிசயங்களும் வியக்கத்தக்க விஷயங்களும் மறைந்து இருக்கிறது. அதைப்பற்றி பார்ப்போம்.
1. திருவண்ணாமலையில் சுவாமி வெளியே வரும் பொழுது எப்பொழுதும் ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வருவார்.
2. தமிழ் நாட்டில் அதிக கோபுரம் கொண்ட ஆலயமாக மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு மொத்தம் 14 கோபுரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
3. பொதுவாக சிவன் கோயில்களில் தீர்த்தம் கொடுப்பது இல்லை. ஆனால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பெருமாள் கோயில்களில் கொடுக்கும் தீர்த்தம் போல் இங்கு வழங்கப்படுகிறது.
4. பொதுவாக, எல்லா ஆலயங்களிலும் மூலவர் வீதி உலா வருவது இல்லை. ஆனால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டும் மூலவரே வீதி உலா வருகிறார்.
5. சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.
6. அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் ஆகும்.
7. பொதுவாக, பெருமாளின் சங்கு இடது கையில் தான் காணப்படும். ஆனால், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.
8. குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை. இங்கு இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை என்பது ஆச்சரியமான விஷயம் ஆகும்.
9. சென்னிமலை வீற்றியிருக்கும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.
10. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







