15 டன் எடையில் ஒரே கல்லில் உருவான 11 அடி உயர கிருஷ்ண பகவானுடைய சிலை

By Sakthi Raj Aug 06, 2026 07:24 AM GMT
Report

கன்னியாகுமரியில் 15 டன் எடையில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 11 அடி உயரகிருஷ்ண பகவானுடைய சிலை குமரியில் இருந்து லாரியின் வழியாக நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் மயிலாடியில் ஏராளமான சிற்பக்கூடங்கள் இருக்கிறது.

இங்கு இருக்கக்கூடிய ஏராளமான சுவாமி சிலைகள் செய்யப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடி சிற்பம் புவிசார் குறியீடு பெற்றது.

இந்த நிலையில் மயிலாடி சேந்தன் புதூர் பகுதியை சேர்ந்த சிற்பி சுப்பிரமணியன் ஆசாரியர் சிற்பக்கூடத்தில் 15 டன் எடையுள்ள ஒரே கல்லில் உருவான கிருஷ்ண பகவானுடைய சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

15 டன் எடையில் ஒரே கல்லில் உருவான 11 அடி உயர கிருஷ்ண பகவானுடைய சிலை | 11 Foot Lord Krishna Idol Carved From Single Stone

வீடுகளில் எந்த நாட்களில் நாம் தவறியும் விளக்கேற்ற கூடாது தெரியுமா ?

வீடுகளில் எந்த நாட்களில் நாம் தவறியும் விளக்கேற்ற கூடாது தெரியுமா ?

இது 11 அடி உயரமும் 33 அடி அகலத்தில் கிருஷ்ணர் சிலையை தத்ரூபமாக கடந்த எட்டு மாதங்களாக இவர் வடிவமைத்து வந்துள்ளார். அந்த கிருஷ்ணர் சிலை திருநெல்வேலி டவுன் புதிதாக கட்டப்படவுள்ள கிருஷ்ணசாமி கோயிலுக்கு அனுப்புவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும் 10 சிலைகள்.. உங்கள் வீடுகளில் உள்ளதா?

வீடுகளில் அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும் 10 சிலைகள்.. உங்கள் வீடுகளில் உள்ளதா?

இந்த கோவிலில் இந்த சிலை நிறுவப்பட இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.அதன்படி கிருஷ்ணன் சிலையை நெல்லைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்திருக்கிறது. அதன் அடிப்படையில் மயிலடியில் சிற்பக் கலைஞர்கள் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

பின்னர் பத்து சக்கரம் கொண்ட கனரக லாரியில் சிலையை கிரேன் மூலம் ஏற்று அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த சுவாமி சிலையை காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US