இன்றைய ராசி பலன் (10-04-2026)
மேஷம்:
நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களை சந்தித்து பேசக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் சிலர் மனம் விட்டு பேசுவீர்கள். வேலை ரீதியாக சந்தித்து வந்த குழப்பங்கள் விலகும் நாள்.
ரிஷபம்:
தொடர் வேலை பளுவால் உடல் சோர்வு உண்டாகலாம். யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பதை பற்றி உணர்ந்து கொள்வீர்கள். தமாணவர்கள் எதிர்கால படிப்பிற்கு தேவையான விஷயங்களை செய்துக் கொள்வீர்கள்.
மிதுனம்:
மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் தோன்றி மறையும். எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயமும் கவலையும் வரலாம். குடும்பத்தில் காலை முதல் சில மனக்கசப்புகள் வந்து மறையும் நாள்.
கடகம்:
இன்று அரசியல் தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். போட்டி பொறாமைகள் விடுத்து செயல்பட்டால் நன்மை உண்டாகும். பண விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
சிம்மம்:
தொழில் ரீதியாக நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நாள். எதையும் ஒன்றுக்கும் பலமுறை யோசித்து முடிவு எடுக்க வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
கன்னி:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பெரியவர்களின் ஆசீர்வாதம் பெறுவீர்கள். சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் நாள். தந்தை உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.
துலாம்:
மாணவர்கள் படிப்பில் அதிக அளவில் அக்கறை செலுத்துவீர்கள். உயர் கல்விக்கு தேவையான ஏற்பாடுகள் செய்துக் கொள்வீர்கள். வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். நன்மையான நாள்.
விருச்சிகம்:
இன்று உங்களின் கோபத்தை குறைத்துக் கொண்டால் நல்லது. உடல் நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
தனுசு:
வீடுகளில் எதிரிகளின் தொல்லை விலகும் நாள். முடிந்த வரை கடன் வாங்கி எந்த ஒரு விஷயங்களையும் செய்யாதீர்கள். கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும்.
மகரம்:
இன்று திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். நண்பர்கள் வட்டாரம் விரிவடையும் நாள்.
கும்பம்:
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று முக்கியமான நாள். சில முக்கிய வாய்ப்புகள் பெற்று சிறந்து முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகள் விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மீனம்:
குடும்பத்தில் திடீர் முக்கிய செய்தியினால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகள் வாழ்க்கையில் நீங்கள் அக்கறை செலுத்துவீர்கள். உங்கள் தவறை புரிந்து கொள்வீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |