நாளைய ராசிபலன் (24-07-2026)

Report

மேஷம்:

இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளின் கவனம் வேண்டும். இனம் புரியாத சில சிந்தனைகளால் மனம் கவலை கொள்ளலாம். மதியம் நற்செய்திகள் வந்து சேரும்.

ரிஷபம்:

மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

மிதுனம்:

நீண்ட நாட்கள் முடிவிற்கு வராத காரியம் நல்ல முடிவை பெறும். புதிய அனுபவங்களை பெறுவீர்கள். சில அதிர்ஷ்டமான வாய்ப்புகள் தேடி வரும்.

2026: ஆகஸ்ட் மாதம் அதிரடி திருப்பங்களை சந்திக்க போகும் துலாம் ராசியினர்..

2026: ஆகஸ்ட் மாதம் அதிரடி திருப்பங்களை சந்திக்க போகும் துலாம் ராசியினர்..

கடகம்:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கடன் சார்ந்த குழப்பங்கள் விலகும நாள்.

சிம்மம்:

ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகளை பெறுவீர்கள். வீடு மனை வாங்குவதை குறித்து ஒரு நல்ல முடிவை எடுப்பீர்கள். அரசு பணிகளால் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.

கன்னி:

இன்று வேலையில் முக்கிய பொறுப்புகளை பெறுவீர்கள். ஒரு சில விமர்சனங்களால் மனதில் கவலை ஏற்படலாம். தேவையில்லாத பேச்சுக்களை குறைத்துக் கொள்வது அவசியம். விவேகத்துடன் செயல்படுவீர்கள்.

துலாம்:

வருமானத்தை மேம்படுத்துவதற்கான வேலையில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்கிறீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்:

சேமிப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பாக பிரச்சனைகள் விலகும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும்.

தனுசு:

செய்யும் வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலரிடம் இருந்து பிரச்சனைகளை சந்திப்பீர்கள். முடிந்து வரை அலுவலகத்தில் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.

வெற்றியின் அடையாளமாக திகழும் மஞ்சள் சிவப்பு.. டி.வி.கே கட்சியின் வெற்றி ரகசியம்

வெற்றியின் அடையாளமாக திகழும் மஞ்சள் சிவப்பு.. டி.வி.கே கட்சியின் வெற்றி ரகசியம்

மகரம்:

வழக்கு தொடர்பாக நீங்கள் புதிய அனுபவங்களை பெறுவீர்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று அதிக ஈடுபாட்டுடன் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மற்றும் சிந்தனைகளில் தெளிவு பிறக்கும்.

கும்பம்:

மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வழக்கு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமான பலனையை கொடுக்கும். வெளியே தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்:

வெளிவட்டாரங்களில் புதிய அனுபவங்களை பெறுவீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றமான நாள். தந்தை வழியே சொத்துக்கள் மூலம் நல்ல ஆதாயம் பெறுவீர்கள். தேவை இல்லாத அலைச்சல் உண்டாகலாம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US