நீங்கள் பிறந்த லக்னம் இதுவா? உங்களுடைய குணம் இது தானாம்
ஜோதிடத்தில் ஒருவர் பிறந்த லக்னம் மிக மிக முக்கியமானது. காரணம் பிறந்த லக்னம் வைத்து தான் அவர்களுடைய ஜாதக கணக்கு தொடங்குகிறது. அப்படியாக 12 லக்னங்களுக்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள்.கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்று காட்டக்கூடிய நபராக இருக்கக் கூடியவர்கள்.
ரிஷபம்:
ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்க்கள் கலை துறையில் அதிக ஆர்வம் கொண்டு இருப்பார்கள். தாயை போல் ஒரு குடும்பத்தை கவனித்து கொள்வார்கள்.
மிதுனம்:
மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலியாக இருக்கக் கூடியவர்கள். இவர்கள் ஒருவருடைய பலம் பலவீனம் அறிந்து செயல்படக்கூடிய தன்மை கொண்டவர்கள்.
கடகம்:
கடக லக்னத்தில் பிறந்தவர்கள் மிகவும் தாய்மை உள்ளம் கொண்டவர்கள். அதே சமயம் இவர்கள் ஒருவரிடத்தில் மிக எளிதாக மனதை பறிகொடுத்து விடுவார்கள்.
சிம்மம்:
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் தலைமை பண்பு உடையவர்கள். நேர் வழியில் சென்று வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். ஒருவருடைய தவறை எந்த ஒரு பயமும் இல்லாமல் சுட்டிக்காட்டக் கூடியவர்கள்.
கன்னி:
கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் மிகப்பெரிய அறிவாளியாக இருப்பார்கள். இவர்களுடைய வாழ்க்கை இவர்களுடைய கல்வியை வைத்து மிக உயர்ந்த நிலைக்கு செல்லும்.
துலாம்:
துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் நிறைய எதிர்பார்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். ஆசைகள் இவர்களுக்கு அதிகம் இருக்கும். சமயங்களில் குழந்தை போன்று பிடிவாதமும் பிடிப்பார்கள்.
விருச்சிகம்:
விருட்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் நிறைய ரகசியம் வைத்திருப்பார்கள். அதேபோல் பலரும் இவர்களிடத்தில் அவர்களுடைய ரகசியத்தை பகிர்ந்து கொள்வார்கள். அதை பாதுகாக்க கூடிய பழக்கமும் இவர்களிடத்தில் இருக்கும்.
தனுசு:
தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் பிறரால் இவர்களுக்கு ஆதாயம் இல்லை என்றாலும் இவர்கள் தேடி சென்று ஒருவருக்கு உதவி செய்வார். மதிப்போடு வாழ விரும்புபவர்.
மகரம்:
மகர லக்னத்தில் பிறந்தவர்கள் சமுதாயத்தில் மிகப்பெரிய மரியாதையோடு வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். சிறந்த தொழிலாளியும் முதலாளியும் இவர்களாகவே இருப்பார்கள்.
கும்பம்:
கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் மிகவும் சமூக அக்கறை கொண்டவர்கள். இவர்களை அவ்வளவு எளிதாக கணிக்க முடியாத நிலை இருக்கும். பெண்களுக்கு அதிகம் மரியாதை கொடுப்பவர்கள்.
மீனம்:
மீன லக்னத்தில் பிறந்தவர்கள் மிகவும் இரக்ககுணம் மற்றும் ஆன்மீக அறிவு கொண்டவர்கள். ஒரு ஆசிரியரைப் போல் பிறரை வழி நடத்துபவர்கள். கொஞ்சம் பயந்த குணம் இவர்களிடத்தில் இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |