இன்றைய ராசிபலன்(30-06-2025)

Report

மேஷம்:

இன்று ஒரு சிலருக்கு மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை தோன்றும். உங்களுக்கு தொந்தரவு கொடுத்த நபர் உங்களை விட்டு விலகி செல்வார்கள். பிள்ளைகள் உடல் நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.

ரிஷபம்:

இன்று வெளிநாடு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். உறுதுணையாக இருந்த நண்பர் உங்களை விட்டு செல்வார்கள்.

மிதுனம்:

அலுவலகத்தில் உங்கள் பெயருக்கு கலங்கம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் சிலர் உங்களை ஏமாற்ற வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்:

இன்று பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகி செல்லும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் விலகும்.

சிம்மம்:

உயர் அதிகாரிகள் பாராட்டுகளை பெறுவீர்கள். ஆடம்பர செலவுகள் தவிர்க்க வேண்டும். தாய் உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். உணவு விஷயங்களில் கவனமாகஇருக்க வேண்டும்.

கன்னி:

குடும்பத்தினர் தேவைகளை புரிந்து நடந்து கொள்வீர்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடை சரி ஆகும். வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலும் தடைகளும் விலகும். மகிழ்ச்சியான நாள்.

துலாம்:

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். தந்தை வழி உறவுகளில் சில சிக்கலை சந்திப்பீர்கள். உங்களை விட்டு பிரிந்த சொந்தங்கள் உங்களை மீண்டும் வந்து சேருவார்கள்.

ஜோதிட பலன்களை மாற்றுமா இறைவழிபாடு?

ஜோதிட பலன்களை மாற்றுமா இறைவழிபாடு?

விருச்சிகம்:

எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 

தனுசு:

மனதில் தெளிவு உண்டாகும். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சூழ்நிலை அறிந்து செயல்படுவது உங்களுக்கு நன்மை அளிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மகரம்:  

நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் பிரச்னை தோன்றி விலகும். வார்த்தைகளில் நிதானம் அவசியம். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர். 

கும்பம்:

வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் தேவை. மனதில் உள்ளதை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வேலை வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.

மீனம்:

உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றிகள் கிடைக்கும். வருமானம் சீராகும். தொலைத்தூர பயணம் நன்மை வழங்கும்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US