நாளைய ராசி பலன் (09-05-2026)
மேஷம்:
எதிர்பார்த்த இடத்தில் இருந்து உங்களுக்கு பணவரவு கிடைக்க சற்று தாமதம் ஆகலாம். தொழில் ரீதியாக சந்தித்த குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். நண்பர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.
ரிஷபம்:
போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் முழு கவனம் செலுத்தி படிக்க வேண்டும். அத்தை வழி உறவுகளால் சந்தித்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
மிதுனம்:
வீடுகளில் பெரியவர்களின் பேச்சு கேட்டு நடந்த சில முக்கியமான பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். குலதெய்வ வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கடகம்:
இன்று சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். தேவை இல்லாத வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை பளு அதிகரிக்கும்.
சிம்மம்:
சிலரின் உண்மை முகம் அறிந்து கொள்வீர்கள். பணம் தொடர்பான விஷயங்களில் உள்ள பிரச்சனை விலகும். வெளிநாடு சென்று வேலை செய்யவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி:
குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்கு நற்செய்தி தேடி வரும். தாய் வழி சொத்துக்களில் உள்ள பிரச்சனை விலகும். வேலை தொடர்பாக இருந்து வந்த கசப்புகள் நீங்கும்.
துலாம்:
காலை முதல் தேவை இல்லாத குழப்பங்களும் சிந்தனைகளும் தோன்றும். திடீர் வெளியூர் பயணம் சில நேரலாம். நண்பர்கள் வழியாக நற்செய்தி வந்து சேரும்.
விருச்சிகம்:
எதிர்காலம் பற்றிய பயம் உருவாகும். கணவன் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எதையும் நிதானமாக யோசித்து முடிவு செய்தால் மட்டுமே வெற்றியை அடையலாம்.
தனுசு:
உங்கள் பற்றி பெருமை அடைவீர்கள். தேவையில்லாத குடும்ப விஷயங்களைப் பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்:
உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தாய் வழி உறவுகளிடம் இருந்து மனக்கசப்புகள் விலகும். புதிய சொத்துக்கள் வாங்குவது பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
கும்பம்:
தேவையில்லாத பேச்சு வார்த்தையால் குடும்பங்களில் சில விரிசல் ஏற்படலாம். மூன்றாம் நபரின் தலையீடுகளை குடும்ப விஷயங்களில் தவிர்ப்பது நல்லது. கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மீனம்:
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த சில விஷயங்கள் கைகளுக்கு வந்து சேரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |