இன்றளவும் தமிழ்நாட்டில் சித்தர்கள் வாழக்கூடிய கோவில் எங்கு இருக்கிறது தெரியுமா ?
நம்முடைய ஆன்மீகத்தில் சித்தர்கள் வழிபாட்டிற்கு எப்பொழுதும் ஒருசிறந்த பலன் உண்டு. மேலும், சித்தர்கள் அஷ்டமா சித்திகளை எல்லாம் வென்றவர்கள். அதுமட்டுமல்லாமல் இன்றளவும் சித்தர்களின் உலகத்திற்கு சென்று அவர்களை பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்ள முடியாத நிலை தான் உள்ளது. அந்த அளவிற்கு சித்தர்களின் உலகம் மர்மம் நிறைந்தது ஆகும்.
அதோடு சித்தர்கள் என்பவர்கள் ஆன்மீகத்தில் மட்டுமல்லாமல் யோகம், ஞானம், தியானம், ரசவாதம் ஆன்மீக சக்திகள் என எல்லாவற்றிலும் சிறந்து விளங்க கூடியவர்கள். மேலும், உலகத்தில் பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்ததாகவும் காலத்தை வென்றவர்களாகவும் சொல்கிறார்கள்.
அந்த வகையில் இன்றளவும் சித்தர்கள் வாழக்கூடிய கோவில்களை பற்றி பார்ப்போம்.

1. பொதிகை மலை :
கர்நாடகா மாநிலத்தில் அமைந்திருக்கிறது இந்த பொதிகை மலை. சித்தர்களின் தலைமை சித்தராக கருதக்கூடிய அகத்திய முனிவர் பொதிகை மலையில் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் காலம் கடந்தும் இந்த சித்தர்கள் இன்றளவும் பொதிகை மலையில் வாழ்ந்து வருவதாகவும் பக்தர்களின் கண்களுக்கு தென்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
பொதிகை மலை என்பது ஆன்மீக ரீதியாக புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த பொதிகை மலையில் அகத்திய முனிவர் அவருடைய மனைவியுடன் சேர்ந்து இருப்பது போல் இருக்கக்கூடிய சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்படுகிறது. அதோடு இன்றளவும் பொதிகை மலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் பல அதிசயத்தை உணர்வதாக சொல்கிறார்கள்.
2. கஞ்சமலை:
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த கஞ்சமலை. சித்தர்களில் கஞ்சமலை சித்தர் எனப்படும் காலங்கிய சித்தர் இடைக்காடனார் ஆகியவர்களுடன் தொடர்புடைய இடமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் காலங்கி சித்தரின் ஜீவ சமாதி இந்த கஞ்சமலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கஞ்சமலை சித்தேஸ்வரர் என்று அழைக்கக்கூடிய இவர் பழனி மலை திருக்கோவில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் சிலையை உருவாக்கிய போகர் சித்தரின் குரு ஆவார். திருவண்ணாமலை போல் இந்த கஞ்சமலையிலும் பக்தர்கள் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் 18 கி.மீ சுற்றளவுள்ள கொண்ட இந்த மலையில் கிரிவலம் செல்கிறார்கள்.
அதோடு இங்கு அமைந்து இருக்கக்கூடிய காந்ததீர்த்த குளத்தில் நீராடும் பொழுது நம்முடைய நோய் நீங்கி ஆரோக்கிய முன்னேற்றம் கிடைக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |