இன்றைய ராசி பலன்(03-11-2025)
மேஷம்:
இன்று சிலருக்கு திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். குடும்பத்தில் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து விடுங்கள். காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்:
இன்று காலை முதல் சில குழப்பங்கள் தோன்றி மறையலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். பெற்றோர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். நினைத்தது நடக்கும் நாள்.
மிதுனம்:
இன்று காலை முதல் சில முக்கியமான முடிவுகள் எடுப்பதில் சிரமங்கள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்களால் சில பிரச்சனை வரலாம். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
கடகம்:
தொழில் ரீதியாக முக்கிய நபரின் ஆலோசனை பெறுவீர்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். கணவன் வழி சொந்தங்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். நன்மையான நாள்.
சிம்மம்:
இன்று நீங்கள் குடும்பத்துடன் முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்கள் வருகையால் உங்களுக்கு சில மன கசப்புகள் வரலாம். எதிர்காலம் பற்றிய சிந்தனை பிறக்கும்.
கன்னி:
வேலையில் சிலருக்கு சிக்கல் உண்டாகும். தொழில் ரீதியாக நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ள படுவீர்கள். முன்னோர்கள் வழிபாடு உங்களுக்கு நன்மை அளிக்கும்.
துலாம்:
இன்று உடல் சோர்வு உண்டாகும். மனதில் காலை சிறு குழப்பம் தோன்றி மறையும். முகம் தெரியாத நபரால் சில ஆதாயம் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்:
மருத்துவரை சந்திக்கும் சூழல் உண்டாகலாம். தந்தை வழி உறவில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொந்தங்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும் நாள்.
தனுசு:
பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சில பொருட்கள் வாங்குவதில் சிரமங்கள் உண்டாகலாம். வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவருக்கு நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.
மகரம்:
இன்று மனதில் தெளிவு பிறக்கும் நாள். பெற்றோர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். சிலருக்கு நினைத்த இடத்தில் இருந்து திருமண வரன் அமையும். கடன் சுமை குறையும்.
கும்பம்:
இன்று தந்தை உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். வெளியே செல்லும் பொழுது பொருட்களில் கவனம் கொள்ளுங்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மீனம்:
இன்று பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். படிப்பு ரீதியாக சிலர் வெளியூர் செல்ல நேரலாம். நீங்கள் நினைத்த காரியம் நடக்கும் நாள். உடன் பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும் நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |