12 ராசிகளுக்கும் எந்த விஷயத்திற்கு அதிக அளவில் கோபப்படுவார்கள் தெரியுமா?
ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உள்ளது. அந்த காரகத்துவம் ஒவ்வொரு ராசியின் மனநிலையாக சில நேரங்கள் இருப்பதை நாம் பார்க்கலாம். அப்படியாக, 12 ராசிகளுக்கும் எந்த விஷயத்திற்கு அதிக அளவில் கோபம் வரும் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியினர் எப்பொழுதும் அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள். ஆதலால் இவர்களுக்கு யாரேனும் சத்தம் போடு பேசினால் அதீத கோபம் வந்து விடும்.
ரிஷபம்:
இவர்களை சுற்றி யாரேனும் தொடர்ந்து பேசி கொண்டே இருந்தால் இவர்களுக்கு கோபம் வரும். மிதுனம்: இவர்களுக்கு கைகளில் பணம் கையில் இருக்க வேண்டும். பணம் குறைய தொடங்கி விட்டால் கோபம் கொள்வார்கள்.
கடகம்:
இவர்கள் எப்பொழுதும் அமைதியான சூழலை எதிர்பார்க்கிறார்கள். ஆதலால் யாரேனும் தொடர்ந்து கேள்வி கேட்டால் இவர்களுக்கு பிடிக்காது.
சிம்மம்:
இவர்கள் யார் எப்படி பழகுகிறார்களோ அவ்வாறே பழகக்கூடியவர். இருப்பினும் யாரேனும் இவர்களின் ஈகோவை துண்டினால் அவர்களை சும்மா விடமாட்டார்கள்.

கன்னி:
இவர்களுக்கு பிடிக்காத விஷயத்தை இவர்களின் நெருங்கியவர்கள் செய்தால் அதீத கோபம் கொள்கிறார்கள்.
துலாம்:
இவர்களை பொறுத்த வரை கட்டுப்பாட்டோடு வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆதலால் அளவிற்கு மீறி செலவு செஞ்ச இவர்களுக்கு கோபம் வரும்.
விருச்சிகம்:
இவர்களுக்கு சுற்றி உள்ள இடம் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படியாக வீடு சுத்தமாக இல்லை என்றால் இவர்கள் கோபம் கொல்வார்கள்.
தனுசு:
ஒரு வேலையை சரியாக செய்து முடிக்கவில்லை என்றால் இவர்களுக்கு அதீத கோபம் வரும்.
மகரம்:
தேவை இல்லாமல் அதிக செலவு செய்தால் இவர்களுக்கு கோபம் வரும்.
கும்பம்:
இவர்களுக்கு சாப்பிட்டு கொண்டு இருக்கும் பொழுது ஏதேனும் வேலை சொன்னால் அதிக அளவில் கோபம் வருகிறது.
மீனம்:
வருமானம் பற்றாக்குறை அடைந்தால் இவர்கள் அதிக அளவில் கோபம் கொள்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |