புண்ணியம் சேர 12 ராசிகள் செய்யவேண்டிய தானங்கள்
ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு பலனும் வேறுபாடுகளும் உண்டு.அப்படியாக வாழ்க்கையில் நலம் பெற்று வாழ 12 ராசிக்காரர்கள் செய்யவேண்டிய தானங்கள் பற்றி பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது மறக்காமல் வெளியில் அமர்ந்து இருப்பவர்களுக்கு முடிந்த தானம் செய்யவேண்டும்.மாற்று திறனாளிகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்கலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்யலாம்.இவ்வாறு செய்யும் பொழுது நல்ல யோகம் உண்டாகும்.ஏழை பெண்ணிற்கு திருமணம் ஆக முடிந்த பண உதவிகள் செய்யலாம்.
மிதுனம்:
மேலும் இவர்கள் புதன் கிழமையில் பெருமாளை வழிபாடு செய்து முடிந்த அளவிற்கு வெண்பொங்கல் தயார் செய்து தானம் கொடுக்கலாம்.கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்கு படிப்பு உதவு செய்தால் நல்ல மாற்றம் சந்திக்க முடியும்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுப்பதால் பணத்தில் உண்டான தடைகள் விலகும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும்.மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபாடு செய்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுத்தால் உங்கள் வாரிசுகள் சிறந்த பலனை பெறுவார்கள்.
விருச்சகம்:
விருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள்குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம். மேலும் வயதான பெண்களுக்கு முடிந்த உதவிகளை செய்யலாம்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வழங்குவது கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடக்கும்போது தானம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும்.மேலும் ஏழை நோயாளிகளுக் மருந்து மாத்திரி வாங்கி கொடுத்தால் வளமான வாழ்வு அமையும்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது.ஏழை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |