12 ராசிக்காரர்களும் எந்த விஷயத்தில் ஏமாறுவார்கள்? ஜோதிடம் சொல்லும் ரகசியம்

By Sakthi Raj Nov 14, 2026 03:41 AM GMT
Report

மனிதர்கள் எல்லோருக்குமே பலம், பலவீனம் என்று இருக்கும். அந்த வகையில், நாம் எல்லாருமே ஏதோ ஒரு இடத்தில் யாரிடமாவது நம்பி ஏமாற்றம் அடைந்திருப்போம். அப்படியாக, ஜோதிட நம்பிக்கை அடிப்படையில் 12 ராசிகளும் எந்த விஷயங்களில் ஏமாறக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.

இன்றைய ராசிபலன் (14-11-2026) இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறதாம்

இன்றைய ராசிபலன் (14-11-2026) இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறதாம்

திருமண வாழ்க்கையில் நம்பி ஏமாறும் ராசிகள்:

மேஷம், சிம்மம், கன்னி:

திருமணம் என்று வருகின்ற பொழுது நமக்கான துணை இவர்கள் என்று அதிக அளவில் நம்பி விடுகிறார்கள். ஆதலால், இவர்கள் அன்பு காதல் எல்லா விஷயங்களும் அவர்களுக்கு கொடுத்து விட்டு, பிறகு அந்த நபரிடம் இருந்து ஒரு சிறிய மரியாதை கூட கிடைக்காமல் ஏமாற்றம் அடைவதை நாம் பார்க்க முடிகிறது.

உறவுகளை நம்பி ஏமாறும் ராசிகள்:

ரிஷபம், தனுசு, விருச்சிகம்:

பிடித்த உறவுகள் என்று வந்து விட்டால் முழுவதுமாக நம்பிவிடுவார்கள். அந்த நபர் எவ்வளவு கெடுதல் செய்தாலும் கண்களுக்கு தெரிவதே இல்லை. காலம் கடந்த பிறகு தான் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதையே இவர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

12 ராசிக்காரர்களும் எந்த விஷயத்தில் ஏமாறுவார்கள்? ஜோதிடம் சொல்லும் ரகசியம் | 12 Zodiac Signs And Their Weaknesses 

பண விஷயங்களில் ஏமாறும் ராசிகள்:

மீனம், துலாம், கடகம்:

இவர்களுக்கு நெருங்கியவர்கள் ஏதேனும் பணக்கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்றால் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. கேட்ட பணம் இல்லை என்று சொல்லாமல் பணத்தை கொடுத்து பின்பு அவர்கள் அதை திரும்பி பெற முடியாமல் ஏமாற்றம் அடைவது உண்டு.

தொழில் ரீதியாக ஏமாறும் ராசிகள்:

மிதுனம், மகரம், கும்பம்:

இந்த ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நம்பக்கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆகையால், ஒருவர் வாய் வார்த்தையாக சொல்லக்கூடிய விஷயங்களை நம்பி நிறைய அளவில் பணத்தை முதலீடு செய்து பிறகு அதில் சில ஏமாற்றங்களை சந்திப்பது உண்டு.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

குறிப்பு:

இந்தத் தகவல்கள் பாரம்பரிய ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இவை தகவல் மற்றும் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மட்டுமே; ஒருவரின் ஆளுமை, நடத்தை அல்லது வாழ்க்கை முடிவுகளுக்கான அறிவியல்பூர்வமான ஆதாரமாகக் கருதப்படக்கூடாது. முக்கியமான முடிவுகளுக்கு தகுதிவாய்ந்த நிபுணரின் ஆலோசனையைப் பெறவும்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US