12 ராசிகளில் யார் அதிகமான சோம்பேறித்தனம் கொண்டவர்கள் என்று தெரியுமா?
பொதுவாகவே, மனிதர்கள் எல்லோருக்கும் சோம்பேறி தனம் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. அதுதான் பல நேரங்களில் அவர்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்க கூடியதாகவும் அமைகிறது.
அப்படியாக, 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிக அளவில் சோம்பேறித்தனம் இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
இவர்கள் உடல்நிலை சரியில்லை என்றால் மட்டும் தான் ஓய்வு எடுப்பார்கள். இல்லையென்றால் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
ரிஷபம்:
இவர்கள் சிறியதாக ஒரு வேலை செய்தாலும் இவர்களுக்கு பெரிய அளவில் ஓய்வு எடுக்க விரும்புவார்கள்.
மிதுனம்:
இவர்களால் எந்த நேரமும் சும்மாவே இருக்க முடியாது. ஏதேனும் ஒரு வேலையை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
கடகம்:
வேலை செய்து கொண்டிருக்கும் போதே பாதியில் அவர்கள் ஓய்வு எடுக்க விரும்புவார்கள்.
சிம்மம்:
இவர்கள் தொலைதூர பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் மட்டும்தான் ஓய்வெடுக்க விரும்புவார்கள்.
கன்னி:
எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு பிறகு தான் இவர்கள் ஓய்வெடுக்க நினைப்பார்கள்.
துலாம்:
இவர்களிடம் சுறுசுறுப்பு மற்றும் சோம்பல் இரண்டும் சமமாக இருக்கும்.
விருச்சிகம்:
இவர்களுக்கு எப்பொழுதும் எதையாவது செய்து கொண்டு இருக்க வேண்டும். சற்று நிமிடம் அமைதியாக இருக்க முடியாது.
தனுசு:
இவர்கள் வேலை பார்த்தால் அதிகமாக பார்ப்பார்கள், இல்லை என்றால் வேலையை பார்க்க விரும்ப மாட்டார்கள்.
மகரம்:
இவர்களுக்கு சோம்பேறித்தனம் என்பது பிடிக்கவே பிடிக்காது ஒன்று. சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
கும்பம்:
இவர்களுக்கு என்ன தோணுதோ அதைத்தான் இவர்கள் செய்வார்கள்.
மீனம்:
பேசுவதற்கு யாராவது கிடைத்தால் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு அரட்டை அடிக்க தொடங்கி விடுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |