வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி - பரவசமடைந்த பொதுமக்கள்
இந்தியாவில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய போது, அதிர்ச்சியளிக்கும் விதமாக சாமி சிலைகள் கிடைத்துள்ளன.
பள்ளம் தோண்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மச்சபுரீஸ்வரர் கோயில் அருகே முகமது பைசல் என்பவர் வசித்து வந்துள்ளார்.
இவர் குறித்த இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்பதற்காக கனரக வாகனத்தை வைத்து மண்ணை அகற்றியுள்ளார். அதன்போது முதற்கட்டமாக ஒரு ஐம்பொன் சிலை கிடைத்துள்ளது.
இதை பார்த்து ஆச்சரியமைந்து மீண்டும் மீண்டும் தோன்டி, அடுத்தடுத்து சிலைகளை கைபற்றியுள்ளனர். மொத்தமாக 14 சாமி சிலைகளும் சில பூஜை பொருட்களும் கிடைத்துள்ளது.
இது தொடர்பில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
14 சாமி சிலைகளில், சோமாஸ்கந்தர், திருஞானசம்பந்தர், சந்திரசேகரன், திருநாவுக்கரசர், விநாயகர் போன்றவர்களுடைய சிலைகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த கிராமவாசிகள் கோயில் அருகே உள்ள முகமது பைசலின் நிலத்தில் கூடியுள்ளனர்.
14 சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் எடுத்து சென்றுள்ளனர்.
குறித்த 14 சிலைகளும் ஐம்பொன்னால் செய்யப்பட்டவை எனவும், 16ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து முடிவை அறிவித்த பின்னரே, சிலைகளின் உண்மையான காலம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.