இறை வழிபாட்டின் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய 15 விஷயங்கள்

By Sakthi Raj Nov 23, 2024 05:23 AM GMT
Report

எப்படி ஒருவருக்கு பாடம் கற்பித்து கொடுக்க ஆசிரியர் தேவையோ அதே போல் மனிதன் நல்வழியில் நடக்க கட்டாயம் இறைவழிபாட்டின் துணை தேவை.அப்படியாக நாம் இறைவழிபாடு மேற்கொள்ளும் பொழுது தெரியாமல் சில தவறுகள் செய்து விடுவதுண்டு. நாம் இப்பொழுது இறைவழிபாட்டின் பொழுது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான 15 விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

இறை வழிபாட்டின் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய 15 விஷயங்கள் | 15 Things We Should Follow While Praying

1.மிகவும் சக்தி வாய்ந்த காயத்ரி மந்திரத்தை ஒரு போதும் பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது சொல்லக்கூடாது.சுத்தமான இடத்தில் அமர்ந்து பாராயணம் செய்வது தான் சிறப்பு.

2.பூஜையின் பொழுது இறைவனுக்கு கற்பூரம் காண்பிப்பது உண்டு அப்படியாக முதலில் இறைவனின் கால்களுக்கு நான்கு முறையும்,இறைவன் வயிற்று பகுதிக்கு இரண்டு முறையம் முகத்துக்கு ஒரு முறையும், முழு உருவத்திற்கு மூன்று முறையும் காண்பித்து வழிபட வேண்டும்.

3.நாம் எந்த ஒரு கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் வீட்டு வாசலில் கோலம் போடாமல் வீட்டில் விளக்கு ஏற்றாமல் செல்லக்கூடாது.

4.விளக்கு எரிந்துக் கொண்டிருக்கும் பொழுது, அதில் இருக்கும் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

5.அந்த அந்த தெய்வங்களுக்கு உரிய அர்ச்சனை இலைகளை கொண்டு மட்டும் தான் அர்ச்சனை செய்யவேண்டும்.மாறி அர்ச்சனை செய்ய கூடாது.

6.குறிப்பாக பெண்கள் வீட்டில் இருக்கும் வேல் மற்றும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யக்கூடாது.

7.கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி வைத்து காண்பிக்க கூடாது.

8.பூஜைக்கு வைத்த தேங்காயை சமையலுக்கு பயன் படுத்திய பிறகு அதே உணவை கடவுளுக்கு மீண்டும் படைக்க கூடாது.

9.அமாவாசை விரதமிருப்பவர்கள் அன்று, வீட்டில் தான் சாப்பிட வேண்டும். வெளியே சமைத்ததை சாப்பிடக்கூடாது. முடிந்தால் அமாவாசை அன்று பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு தரலாம்.

10.இறைவனிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டு வழிபாடு செய்வது தவறு.அவரை முழு மனதோடு கண் விழித்து வெறும் மனதாக வழிபடுவதே சிறந்தது.

சகல நன்மைகள் அருளும் மஹாலக்ஷ்மி தாயாரின் தீப வழிபாடு

சகல நன்மைகள் அருளும் மஹாலக்ஷ்மி தாயாரின் தீப வழிபாடு

11.இறை வழிபாட்டின் பொழுது அடுத்தவரை திட்டவோ சபிப்பதோ கூடாது.

12.மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய கவனம் முழுவதும் மந்திரத்தின் மேல் மட்டுமே இருக்க வேண்டும்.அருகில் இருப்பவரிடம் சிறிது நேரம் பேசி பிறகு சொல்வது போன்ற செய்லகளில் ஈடுபடுவது கூடாது.

13.இறை வழிபாடு மட்டும் இன்றி இறைவனை எப்பொழுதும் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.

14.விரதம் இருப்பது என்பது நம்முடைய பக்தியால் அன்பின் வெளிப்பாட்டால் செய்வது.அதை ஒரு போதும் விளம்பர படுத்துதல் போன்ற விஷயங்கள் செய்ய கூடாது.

15.இறை வழிபாட்டின் பொழுது நம்முடைய மனதிற்கு தோன்றியதை தான் செய்யவேண்டும் தவிர பிறரை பார்த்து பூஜை செய்வதோ போட்டியாக செய்வது தவறு.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US