பூஜை அறையில் முக்கியமாக இருக்க வேண்டிய 17 பொருட்கள் என்ன தெரியுமா?

By Sakthi Raj Sep 29, 2026 12:02 PM GMT
Report

நம்முடைய பூஜை அறை என்பது கோவிலுக்கு நிகராக பார்க்கக்கூடிய ஒரு இடமாகவே இருக்கிறது, அந்த வகையில், நம்முடைய பூஜை அறையில் தெய்வ அனுக்கிரகம் பெறுவதற்கு இந்த 17 பொருட்களை எப்பொழுதும் வைத்திருப்பது நல்ல பலன்களை கொடுக்கிறது, அதை பற்றி பார்ப்போம்,

1. அட்சதை:

மஞ்சள் கலந்து தயாரிக்கப்படும் அரிசியான அட்சதை கட்டாயமாக வீடுகளில் இருக்க வேண்டும்.

2. கோமாதா படம்:

பசுவை புனிதமாக கருதும் இந்து மரபின் அடையாளமாக கோமாதா பார்க்கப்படுகிறது. கட்டாயமாக கோமாதா படம் இருப்பது நல்லது.

3.சோழிகள்:

இவை பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஆன்மீக நம்பிக்கை நிறைந்ததாக இருக்கிறது.

பூஜை அறையில் முக்கியமாக இருக்க வேண்டிய 17 பொருட்கள் என்ன தெரியுமா? | 17 Things Should Keep In Pooja Room For Protection

வீடுகளில் செல்வம் பெருக புதன்கிழமை காமாட்சி அம்மன் விளக்கு வழிபாடு செய்வது எப்படி?

வீடுகளில் செல்வம் பெருக புதன்கிழமை காமாட்சி அம்மன் விளக்கு வழிபாடு செய்வது எப்படி?

4. தாமரை விதைகள்:

தாமரை ஒரு தூய்மை மற்றும் ஆன்மீக உயர்வின் அடையாளமாக பார்க்கப்படுவதால் தாமரை விதைகளும் சில வழிபாட்டு மரபுகளில் இடம் பெறுகிறது.

5. மணி;

பூஜையின் போது மணி ஒலிப்பது அவசியம். இவை எதிர்மறை ஆற்றலையும் விலக்குகிறது.

6. சாளக்கிராமம்:

வைணவ மரபில் மிகவும் புனிதமாக கருதக்கூடிய ஒரு பொருளாகும்.

7. பச்சை கற்பூரம்:

பூஜை மற்றும் ஆரத்தி வழிபாடுகளில் பயன்படுத்தக்கூடிய முக்கியமான பொருள்.

8. தர்ப்பைப் புல்:

பல வேதம் மற்றும் இந்து சடங்குகளில் இவை முக்கியமானதாக கருதப்படுகிறது. பஞ்சாங்கம், தேதி, நட்சத்திரம் யோகம் கரணம் போன்ற கால குறிப்புகளை அறிய பயன்படுத்தக்கூடியது.

9. சங்கு:

விஷ்ணு வழிபாட்டின் மிக முக்கியமான ஒன்று. ஆன்மீக மரபிலும் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கக் கூடிய ஒரு பொருள்.

10. பஞ்சாமிர்த பொருட்கள்:

பால், தயிர், தேன், சர்க்கரை ஆகிய ஐந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது .

11. மயில் இறகு:

யிலிறகு கிருஷ்ண பகவான் மற்றும் முருக பெருமான் உடைய நெருங்கிய தொடர்பு கொண்டது.

பூஜை அறையில் முக்கியமாக இருக்க வேண்டிய 17 பொருட்கள் என்ன தெரியுமா? | 17 Things Should Keep In Pooja Room For Protection

2026 அக்டோபர்: அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க வரும் கஜகேசரி ராஜயோகம்..

2026 அக்டோபர்: அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க வரும் கஜகேசரி ராஜயோகம்..

12. பகவத் கீதை:

தர்மம், அதர்மம், கடமை, ஆன்மீகம், உறவு பற்றின்மை ஆகிவற்றை குறிக்கக்கூடியது. வாழ்க்கை வழித்துணையாக கூட்டிச் செல்லும் அற்புதம் நூல்.

13. பச்சை வளையல்கள்:

பச்சை நிறம் என்பது மங்களம், வளம் செழிப்புடன் தொடர்புடையது.

14. குண்டுமணி விதைகள்:

இந்திய பாரம்பரியத்தில் பல்வேறு பயன்பாடுகள் கொண்டவை.

16. சந்தன கட்டை:

இறைவனுக்கு சந்தனம் சாற்றுவது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இது காலம் காலமாக பின்பற்றி வரும் மரபு.

17. மந்திர ஜெபத்திற்கான புனிதன் நூல்:

இறைவழிபாட்டில் மந்திரங்கள் தவிர்க்க முடியாத ஒன்று. அவை கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட 17 பூஜை பொருட்கள் இவையெல்லாம் எல்லோருடைய வீடுகளிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது அல்ல. ஆனால் இருந்தால் நமக்கு நல்ல பலன்களை கொடுக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US