வீட்டில் தீய சக்திகள் நுழையாமல் இருக்க செய்யவேண்டிய 2 எளிய பரிகாரங்கள்
மனிதர்கள் வாழும் இடம் எப்பொழுதும் நல்ல எதிர்மறை சக்திகள் கொண்டு நிரம்பி இருக்க வேண்டும். அதாவது, நாம் வசிக்கும் வீடு சொந்த இடமாக இருந்தாலும் சரி, வாடகை இடமாக இருந்தாலும் சரி நல்ல அதிர்வலைகள் இருந்தால் மட்டுமே நாம் அங்கு நிம்மதியாக வாழ முடியும். அல்லது நம் வாழ்க்கையே ஒளி இழந்து காணப்படும்.
மேலும், நாம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு கிரக அமைப்புகள் ஒருபக்கம் காரணமாக இருந்தாலும், மறுபுறம் கட்டாயம் நாம் வசிக்கும் இடத்தின் வாஸ்துவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
வாஸ்து சரி இல்லை என்றால் நமக்கு நடக்கும் சில கெட்ட நேரங்கள் இன்னும் அதிவேகமாக செயல்பட்டு நமக்கு தீவிரமான தாக்கத்தை கொடுத்து விடுகிறது. அவ்வாறு சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து வெளியே வந்து நிம்மதியான சூழலில் வாழ கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்து, எட்டு திசைகளையும் காத்து வருகின்ற அஷ்டதிக் பாலகர்களையும் மனதார வழிபாடு செய்யது வர நல்ல மாற்றத்தை காணலாம்.
அதாவது, எட்டு திசைகளையும் காத்து வருபவர்கள் இந்திரன், அக்னி, யமன், திருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் ஆவார்கள். அவரக்ளுக்கு உரிய வழிபாடும் பரிகாரமும் செய்தால் நாம் சந்திக்கும் இன்னல்கள் விலகும் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
பரிகாரம்: 1
ஒவ்வொரு மாதமும் வாஸ்து தினம் வருவதுண்டு. அன்றைய தினத்தில் நாம் மஞ்சள் அரைத்து, அதனை நிலை, கதவு, ஜன்னல் ஆகிய இடங்களில் வைத்து அதற்கு மேல் குங்குமம் வைக்க வேண்டும்.
இதை ஒவ்வொரு வாஸ்து தினத்திலும் சரியான வாஸ்து நேரத்தில் நாம் செய்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர, நமக்கு வஸ்துவால் உண்டாகும் பிரச்சனையும், தீய சக்திகளால் சந்திக்கும் இன்னல்களும் விலகுகிறது.
பரிகாரம்: 2
சிலரால் ஒவ்வொரு மாதமும் வரும் வாஸ்து நாளை தெரிந்து பரிகாரங்கள் செய்ய முடியாது என்று நினைப்பவர்கள், எட்டு திசைகளையும் காத்துநிற்கும் பாலகர்களைக் கீழ்க்கண்ட மந்திரங்கள் சொல்லி தினமும் காலையில் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்ய, அந்த மந்திரத்தின் ஆற்றல் எப்பேர்ப்பட்ட தீய சக்திகளும் நம் வீட்டிற்குள் வர விடாமல் தடுத்து காக்கிறது.
இந்திரன்:
ஐராவத கஜாரூடம்
ஸ்வர்ண வர்ணம் கிரீடிநம்
ஸஹஸ்ர நயநம் ஸக்ரம்
வஸ்ரபாணிம் விபாலயேத்
வருணன்:
நாகபாஸதரம் ஹ்ருஷ்டம்
ரக்தௌ கத்யுதி விக்ரஹம்
ஸஸாங்க தவளம் த்யாயேத்
வருணம் மகராக்ஷணம்
ஓம்
அக்னி:
ஸப்தார் சிஸம் சபிப்ராணம்
அஜமாலம் கமண்டலம்
ஜ்வாலா மாலாகுலம் ரக்தம்
ஸக்தி ஹஸ்தம் சகாஸ நம்
யமன்:
க்ருதாந்தம் மஹிஷாரூடம்
தண்டஹஸ்தம் பயாநகம்
காலபாஸதரம் க்ருஷ்ணம்
த்யாயேத் தக்ஷிணா திக்பதிம்
நிருதி:
ரக்தநேத்ரம் ஸவாரூடம்
நீலோத்பல தளப்ரபம்
க்ருபாணபாணி மாஸ்ரௌகம்
பிபந்தம் ராக்ஷஸேஸ்வரம்
ஓம்
வாயு:
ஆபிதம் ஹரிதச் சாயம்
விலோலத் வஜ தாரிணம்
ப்ராணபூதம்ச பூதாநாம்
ஹரிணஸ்தம் ஸமீரணம்
குபேரன்:
குபேரம் மனுஜா ஸுநம்
ஸகர்வம் கர்வவிக் ரஹம்
ஸவர்ணச்சாயம் கதாஹஸ்தம்
உத்ராதிபதிம் ஸ்மரேத்
ஈசானன்:
ஈஸாநம் வ்ருஷபாரூடம்
த்ரி ஸுலம் வ்யாலதாரிணம்
சரச் சந்த்ர ஸமாகாரம்
த்ரி நேத்ரம் நீலகண்டகம்
ஓம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |