அதிர்ஷ்டத்தை வழங்கும் இரு கிரக இணைப்புகள்..உங்கள் ஜாதகத்தில் உள்ளதா?

By Sakthi Raj Jul 30, 2026 08:58 AM GMT
Report

ஜோதிடத்தில் ஒரு கிரகங்களுடன் மற்றொரு கிரகம் இணைய அவை சில நேரங்களில் மிகப்பெரிய யோகத்தை கொடுக்கிறது. அப்படியாக, 6 ஜோதிட யோகங்களும் அதனால் கிடைக்கக்கூடிய பலன்களை பற்றியும் பார்ப்போம்.

1. ஒருவர் ஜாதகத்தில் குரு சந்திரன் சேர்க்கை பெற்றால் அவர்களுக்கு கஜகேசரி யோகம் உருவாகும். இதனால் அந்த நபருக்கு பெயர், புகழ், செல்வாக்கு வாழ்க்கையில் தடைகளை தகர்த்து வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

2. ஒருவர் ஜாதகத்தில் சூரியன் மற்றும் புதன் சேர்க்கை பெற்றிருந்தால் அவர்களுக்கு புதாதித்ய யோகம் உண்டாகும். இவர்கள் அறிவில் சிறந்து விளங்குவார்கள். கல்வியில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். அரசு துறையில் வாய்ப்புகள் உண்டு.

அதிர்ஷ்டத்தை வழங்கும் இரு கிரக இணைப்புகள்..உங்கள் ஜாதகத்தில் உள்ளதா? | 2 Powerful Planetary Combinations That Bring Luck

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் மற்றும் கெட்ட சக்திகள் விலக செய்ய வேண்டிய பரிகாரம்

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் மற்றும் கெட்ட சக்திகள் விலக செய்ய வேண்டிய பரிகாரம்

3. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தால் அவர்களுக்கு சந்திர மங்கள யோகம் உண்டாகும். இதனால் இவர்களுக்கு நிறைய சொத்துக்கள் சேர்க்கை, ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.

4. ஒருவருக்கு ஜாதகத்தில் குரு செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தால் அவர்களுக்கு குரு மங்கள யோகம் உண்டாகும். இதனால் அவர்களுக்கு தைரியம் மற்றும் தலைமைத்துவ பண்பில் சிறந்து விளங்க கூடிய குணமும் நேர்மை வழியில் செல்வத்தை சேர்க்கக்கூடிய அமைப்பும் உருவாகும்.

அதிர்ஷ்டத்தை வழங்கும் இரு கிரக இணைப்புகள்..உங்கள் ஜாதகத்தில் உள்ளதா? | 2 Powerful Planetary Combinations That Bring Luck

வாங்கும் சம்பளம் கையில் தங்கவில்லையா? இந்த விஷயங்களை உடனடியாக செய்யுங்கள்

வாங்கும் சம்பளம் கையில் தங்கவில்லையா? இந்த விஷயங்களை உடனடியாக செய்யுங்கள்

5. ஒருவர் ஜாதகத்தில் புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தால் அவர்களுக்கு லட்சுமி நாராயண லோகம் கிடைக்கும். இதனால் இவர்கள் கலைகளில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள், சிறந்த பேச்சாற்றலுடனும் செல்வ செழிப்போடும் வாழக்கூடிய அமைப்பு உருவாகும்.

6. ஒருவர் ஜாதகத்தை குரு சூரியன் சேர்க்கை பெற்றிருந்தால் அவர்களுக்கு சிவராஜ யோகம் உண்டாகும். இதனால் இவர்களுக்கு சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து அதிகார பதவிகள் ஆன்மீக பலத்தை கொடுக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US