ஒருவருக்கு ஆலோசனை சொல்வதில் வல்லுனர்களாக திகழும் ராசிகள் யார் தெரியுமா?
நாம் ஒரு சிலரை பார்த்திருப்போம். அவர்கள் மிக எளிதாக எல்லா விஷயங்களையும் அணுகி அதற்கான தீர்வையும் சொல்லிவிடுவார்கள். அதாவது யாரேனும் பிரச்சனை என்று அவர்களிடத்தில் போய் நின்றால் ஒரு சிறந்த மனநல மருத்துவர் போல் அந்த பிரச்சனையை அணுகி அவர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் அவர்கள் கற்றுக் கொடுத்து விடுவார்கள்.
இதற்கு அவர்கள் ராசி அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படியாக எந்த ராசியில் பிறந்தவர்கள் ஒருவருக்கு ஆலோசனை சொல்வதில் வல்லுனர்களாக இருக்கக் கூடியவர்கள் என்று பார்ப்போம்.

கன்னி:
புதன் பகவானின் ஆதிக்கம் பெற்ற கன்னி ராசியினர் இவர்கள் இயற்கையாகவே அதீத புத்திசாலியாக இருப்பார்கள். வாழ்க்கையில் நிறைய அனுபவங்களை பெற்று அதை மற்றவர்களிடத்தில் பகிர வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும்.
அதேபோல் ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால் அங்கு இவர்கள் முன் நின்று அந்த பிரச்சினையை தீர்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அது மட்டுமல்லாமல் இவர்கள் சொல்லக்கூடிய அந்த ஆலோசனை அந்த பிரச்சனையிலிருந்து எளிதாக வெளிவரக்கூடியதாக அமைகிறது.
மீனம்:
குரு பகவானின் ஆதிக்கத்தை பெற்ற மீன ராசியினர் ஒருவருக்கு ஆலோசனை வழங்குவதில் எப்பொழுதுமே சிறந்து விளங்க கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லோர் மீதும் அதிக அளவில் அன்பும் அக்கறையும் காட்டப்படுவார்கள்.
அது மட்டுமல்லாமல் குருபகவானுடைய அருளால் இவர்கள் வாழ்க்கையில் கடினமான காலங்களை கடந்து நிறைய அனுபவங்களை பெற்றிருப்பார்கள். அந்த அனுபவங்கள் எல்லாம் மிகவும் பக்குவப்பட்டதாக இருக்கும். ஆக இவர்கள் ஒருவருக்கு ஆலோசனை சொல்லும் பொழுது அந்த ஆலோசனை அவரின் வாழ்க்கைக்கு வெற்றியை கொடுக்கக் கூடியதாக அமைகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |