ராமநவமி அன்று இந்த பொருட்களை வாங்கினால் வீடுகளில் அதிர்ஷ்டம் தேடி வருமாம்
மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில் ஏழாவது அவதாரமாக ஸ்ரீ ராம அவதாரம் இருக்கிறது. அதாவது தெய்வமே மனிதனாக பிறந்து வாழ்ந்த ஒரே அவதாரம் ராம அவதாரம் தான். அந்த வகையில் ஸ்ரீ ராமர் பூமிக்கு அந்த தினத்தை நாம் ராம நவமி என்று கொண்டாடுகிறோம்.
அந்த வகையில் இந்த வருடம் ராமநவமி மார்ச் 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த அற்புதமான ராம நவமி தினத்தில் நாம் சில பொருட்களை வீட்டிற்கு கொண்டு வருவதால் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
இவ்வாறு செய்யும் பொழுது நமக்கு ஸ்ரீ ராமபிரானின் அருள் மட்டும் அல்ல மகாலட்சுமியின் முழு அருளும் நமக்கு கிடைக்கிறது. அப்படியாக அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

1. ராம நவமி அன்று நாம் மஞ்சள் நிற பொருட்களை வீட்டிற்கு எடுத்து வரும் பொழுது மிகவும் மங்களகரமான கருதப்படுகிறது. அதாவது மஞ்சள் நிற ஆடைகள், சந்தனம் தங்கம் அல்லது இனிப்புகள் என எதுவாக இருந்தாலும் மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய பொருட்களை நம் வீட்டிற்கு வாங்கி வரும் பொழுது அதிர்ஷ்டம் தேடி வருகிறது. காரணம் ஸ்ரீ ராமபிரானுக்கு மஞ்சள் நிறம் மிகவும் பிடித்த நிறம்.
2. ராம நவமி அன்று நாம் வெள்ளிப் பொருட்களை வீட்டிற்கு எடுத்து வரும்போது நமக்கு சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதை ராம நவமியில் வாங்கி வைக்கும் பொழுது ஸ்ரீ ராமரின் ஆசிர்வாதம் நமக்கு எப்போதும் கிடைக்கும்.

3. ஜோதிட சாஸ்திரத்தில் ராமநவமி தினத்தன்று பூஜை பொருட்களை வீட்டிற்கு வாங்கி வரும் பொழுது அதிர்ஷ்டம் சேருகிறது. அதாவது இந்த நாளில் மாமர கட்டைகள், சந்தனம், பசு நெய், அரச இலைகள், கிராம்பு, ஏலக்காய், பார்லி போன்ற பொருட்களை வீட்டிற்கு வாங்கி வரலாம்.
4. அதேபோல் ராமநவமி அன்று ஸ்ரீ ராமபிரானின் ராம தர்பார் படத்தை வைப்பது குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் அவை அதிகரிக்கிறது. இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் ஒற்றுமையும் சமுதாயத்தில் மிகப்பெரிய அளவில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |