அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தரும் பாகிஸ்தானின் 200 யாத்ரீகர்கள்
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி பிரம்மாண்ட ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
அதன்பிறகு, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோயிலுக்குச் சென்று பால ராமரை தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து 200 பேர் கொண்ட தூதுக்குழு அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு இன்று வர உள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த சிந்தி சமூகத்தினர் இந்தியாவில் ஒரு மாதம் சுற்றுலா வருகின்றனர்.
"பிரயாக்ராஜில் இருந்து அயோத்திக்கு சாலை வழியாக அவர்கள் வருகிறார்கள். அவர்களுடன் இந்தியாவின் சிந்தி சமூகத்தைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் மதப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
அவர்களுக்கு ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா குழு சார்பில் வரவேற்பளிக்கப்பட உள்ளது. இதற்காக சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரயாக்ராஜில் இருந்து இந்த சுற்றுலாப் பயணிகள் குழு பேருந்து மூலம் அயோத்தியை அடைவார்கள்.
பாரத் குண்டா, குப்தர் காட், ரூபன் உள்ளிட்ட பல்வேறு இடங்களை இக்குழு பார்வையிடும்" என ராஷ்டிரிய சிந்தி விகாஸ் பரிஷத் உறுப்பினர் விஸ்வ பிரகாஷ் ரூபான் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரும் சிந்தி யாத்ரீகர்கள் அயோத்திக்கு வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தியில் உள்ள உதாசின் ரிஷி ஆசிரமம் மற்றும் ஷபரி ரசோய் ஆசிரமத்தில் பக்தர்களுக்கு சிறப்பு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை நடைபெறும் சரயு ஆரத்தியில் யாத்ரீகர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அந்த சந்தர்ப்பத்தில், சம்பத் ராய் சிந்தி யாத்ரீகர்களை வரவேற்பார்.
மேலும், அயோத்தியின் சிந்தி தாம் ஆசிரமத்தில் பாகிஸ்தான் யாத்ரீகர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வரும் சிந்தி சமூகத்தைச் சேர்ந்த யாத்ரீகர்களும் பங்கேற்று பாகிஸ்தான் யாத்ரீகர்களை வரவேற்பார்கள்.
மேலும், சந்த் சதா ராமதர்பார் மடத்தின் அதிபரான யுதிஷ்டிர லால் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |