சென்னையில் மொத்தம் 2005 விநாயகர் சிலை கடலில் கரைப்பு
இந்து மத மக்கள் பிள்ளையாரை முதன்மை தெய்வமாக கொண்டாடுகிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி அன்று பலரும் விநாயகர் சிலையை வாங்கி அதனை வீட்டில் வைத்து பூஜை செய்து வழிபட்டு கரைப்பார்கள்.
அந்தவகையில், இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27, 2024 புதன்கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் பல பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்தனர்.
வழிபட்ட பின்னர் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் முதல் நாளில் இருந்தே கரைக்கப்படுகின்றன.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
அந்த வகையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
அதன்படி, சென்னையில் இரவு 9 மணி நிலவரப்படி மொத்தம் 2005 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







