உருவாகும் லட்சுமி நாராயணன் யோகம்: அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் 4 ராசிகள்
இந்த ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டு லட்சுமி நாராயணன் யோகம் உருவாக உள்ளது. இந்த மாதத்தில் புதன் பகவான் மற்றும் சுக்கிரன் பகவான் இணைய உள்ளார்கள்.
ஜோதிடத்தில் இந்த இணைவு மிக சிறந்த அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது. அப்படியாக, உருவாகும் இந்த லட்சுமி நாராயணன் யோகத்தால் 4 ராசிகள் மிகப்பெரிய அதிர்ஷ்டம் பெறப்போகிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
இந்த மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்க உள்ளது. தொழிலில் சந்தித்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி செல்லும். அதோடு, காதல் வாழ்க்கையில் சந்தித்த இன்னல்கள் விலகும். ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பாக 19 தேதி இவர்களுக்கு அதிர்ஷ்ட நாளாக அமைய உள்ளது.
கடகம்:
கடக ராசியின் புத்திசாலித்தனத்தால் நினைத்ததை சாதிப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும். வேலையில் புதிய முக்கிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். இவர்களுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி மிக சிறந்த நாளாக அமையப் போகிறது.
சிம்மம்:
இந்த நேர்தத்தில் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 7 மற்றும் 15 ஆம் தேதி மிக சிறந்த அதிர்ஷ்ட நாளாக இருக்கும். சமுதாயத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். திடீர் வெற்றி வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு பொருளாதார ரீதியாக சிறந்த மாற்றம் நடக்க உள்ளது. உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் உள்ள குழப்பங்கள் விலகும். இவர்களுக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அதிர்ஷ்டமான நாளாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியம் நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







