2025 பரணி தீபம் திருவண்ணாமலையிலிருந்து நேரலை
2025 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் பிறந்து மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கின்ற நேரத்தில் திருக்கார்த்திகை பண்டிகையை நாம் கொண்டாட காத்திருக்கின்றோம். அந்த வகையில் மாலை நேரம் திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
மகா தீபத்தில் கலந்துகொள்ள பல லட்சம் பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த அண்ணாமலையாரை தரிசனம் செய்வார்கள். அது மட்டுமல்லாமல் திருக்கார்த்திகை தீபத்திருநாள் அன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்படும்.
இந்த பரணி தீபம் ஆனது மிக முக்கியமான மற்றும் விசேஷமானதாகும். இந்த பரணி தீபம் காணவும் பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தருவார்கள். அப்படியாக 2025 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய பரணி தீபத்தை நாம் அனைவரும் கண்டுகளித்து ஈசனின் அருள் பெற ஐபிசி தமிழ் பக்தி ஒரு சிறப்பான நேரலை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அதை பார்த்து நாம் அண்ணாமலையாரின் அருளை பெற்று இந்த திருக்கார்த்திகை தீபத்திருநாளை மிகச் சிறப்பாக கொண்டாடி வளம் பெறுவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |