2025 சந்திர கிரகணம்- கர்ப்பிணி பெண்கள் மறந்தும் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்
இந்த 2025ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் செப்டம்பர் 7ஆம் தேதி நிகழவுள்ளது. அதாவது செப்டம்பர் 7- 8 ஆகிய இரண்டு தேதிகளில் முழு சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் இதனை சூத்ர கிரகணம் என்றும் சொல்வார்கள்.
அப்படியாக நம்முடைய இந்து மத மரபுகளின் படி இந்த கிரகண நாளில் கர்ப்பிணி பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது சொல்லப்படடுகிறது. அந்த வகையில் சந்திர கிரகணம் நடக்கும் நாளில் கர்ப்பிணி பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
சந்திர கிரகணம் நிகழும் நாளில் கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்வதை தவிர்ப்பது நன்மை தரும். இவர்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாகவும் அமைதியான இடத்திலும் இருப்பது அவர்களுக்கு மன அமைதியை கொடுக்கும்.
இவர்கள் அந்த நாளில் ஆன்மீகத்தில் மனதை ஈடுபடுத்த வேண்டும். அதோடு அன்றைய தினத்தில் புனித நூல்கள் படிப்பது இறைவனுடைய மந்திரங்கள் பாராயணம் செய்வது, தியானம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபடுவது அவர்களுக்கு நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கும்.
அதேபோல் கிரகண நாளில் மிகவும் எளிதாக ஜீரணிக்க கூடிய உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிக்க பானங்களை அருந்துவது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
நம்முடைய இந்து மதத்தில் துளசி புனிதமாக கருதப்படக் கூடிய ஒரு செடியாகும். சந்திர கிரகண நாளில் காலையில் துளசி செடியை வழிபாடு செய்து, தண்ணீரில் துளசி இலைகளை போட்டு அருந்துவது நன்மை உண்டாக்கும்.
முடிந்தவரை சந்திர கிரக நாளில் மனதையும் உடலையும் அமைதியாக வைத்திருக்க வேண்டும். போதுமான அளவு அவர்கள் உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் சந்திர கிரகணத்தின் பொழுது கிரகணத்தை நேரடியாக பார்ப்பது முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும்.
அவ்வாறு செய்வது கருவில் உள்ள குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். சந்திர கிரகணத்தின் பொழுது கட்டாயம் நாம் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். அதோடு கிரகணம் முடிந்த பிறகு குளித்து சுத்தமான ஆடைகளை அணிந்து கொள்வது அவசியம்.
குளிக்க முடியாதவர்கள் கை கால் முகத்தை கழுவிக்கொண்டு புதிய ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். அதோடு வீட்டை சுத்தம் செய்த புனிதமான நீர்கள் தெளிப்பதும் நன்மை உண்டாக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







