இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அனைத்து கடவுளின் ஆசீர்வாதமும் கிடைக்குமாம்
ஜோதிடத்தில் நியூமராலஜி மிக முக்கியமாக பார்க்கக்கூடிய ஒரு விஷயமாகும். இந்த நியூமராலஜி கொண்டும் நாம் ஒருவருடைய வாழ்க்கையை கணித்து விடலாம். அந்த வகைகயில் குறிப்பிட்ட சில எண்களில் பிறந்த நபர்களுக்கு எப்பொழுதும் அதிர்ஷ்டமும் கடவுளின் ஆசிர்வாதமும் இருக்குமாம். அவர்கள் எந்த எண்ணில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம்.
எண் 3:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள். இவர்களுக்கு எப்பொழுதும் கடவுளின் ஆசிர்வாதம் இருப்பதை நாம் காணலாம். அவர்களை சுற்றிலும் எப்பொழுதும் நேர்மறை ஆற்றல் இருந்து கொண்டே இருக்கும். அதனால் இவர்களுக்கு நண்பர்கள் கூட்டமும் சற்று அதிகமாகவே இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் அவ்வளவு எளிதாக கஷ்டங்களை சந்தித்து விட மாட்டார்கள். மேலும், கடவுள் துணை கொண்டு வருகின்ற கஷ்டங்களையும் அவர்கள் எளிதாக கடந்து விடுவார்கள்.
எண் 7:
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு எப்பொழுதும் கடவுளின் ஆசீர்வாதம் கருணையும் இருக்கும். இவர்கள் மிகவும் மன தூய்மை கொண்டவர்கள். பிறரை காயப்படுத்த வேண்டும், பிறரை துன்பப்படுத்த வேண்டும், துரோகம் செய்ய வேண்டும் என்று ஒரு துளி எண்ணமும் அவர்களிடம் இருக்காது. இவர்களுக்கு உள் உணர்வு சற்று அதிகமாகவே இருக்கும். இவர்களுடைய தொலைநோக்கு பார்வையால் இவர்கள் வாழ்க்கையில் மிக உயரத்தை எளிதாக அடைகிறார்கள்.
எண் 9:
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமும் வாய்ப்புகளும் எப்பொழுதும் கதவுகளை தட்டிக் கொண்டே இருக்கும். இந்த எண்ணில் பிறந்தவர்களை பொதுவாக அனைவரும் விரும்பக் கூடிய நபராக இருப்பார்கள். இவர்கள் தங்களை சுற்றி உள்ள நபர்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களுடைய நல்ல எண்ணத்தால் இவர்களுக்கு கடவுளின் கருணையும் ஆசீர்வாதமும் கிடைக்கிறது. இவர்கள் கடவுளின் துணை கொண்டு வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







