முடிவுக்கு வரும் சனியின் ஆட்டம்- இனி இந்த 3 ராசிகளுக்கு கொண்டாட்டம் தானாம்
ஜோதிடத்தில் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் கடந்த சில நாட்களாக வக்ர நிலையில் இருந்து பயணித்து வருகிறார். அவர் இன்னும் பத்து நாட்களில் வக்ர நிலையில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்புகிறார். இந்த மாற்றமானது பல்வேறு ராசிகளுக்கு நல்ல சிறப்பான பலன்களை கொடுக்கிறது. சனியின் இந்த வக்ர பெயர்ச்சி முடிவுவால் எந்த ராசியினர் மிகப்பெரிய அளவில் நன்மை அடைய போகிறார்கள் என்று பார்ப்போம்.

கடகம்:
கடக ராசியினருக்கு சனி பகவானுடைய இந்த வக்ர பெயர்ச்சி நிவர்த்தியால் இவர்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடைகள் யாவும் விலகி வெற்றி பெறப் போகிறார்கள். தொழில் வாழ்கையில் நீண்ட நாட்களாக இவர்கள் எதிர்பார்த்த விஷயங்கள் கைக்கூடி வரும் காலமாகும். வம்பு வழக்குகள் இவர்களுக்கு சாதகமான முடிவையும் இவர்கள் எதிர்பார்த்த பலனையும் கொடுக்க உள்ளது.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு சனி பகவானுடைய இந்த மாற்றமானது இவர்கள் வாழ்க்கையில் ஒரு குழப்பத்தை போக்கி ஒரு நல்ல தெளிவான நிலையை கொடுக்க உள்ளது. கடந்து சில நாட்களாக இவர்கள் நிறைய வாழ்க்கை பாடங்களை கஷ்டங்கள் வாயிலாக கற்றுக் கொண்டிருப்பதால் இவர்கள் அந்த கஷ்டத்தில் இருந்து விடுபட்டு வாழ்க்கையில் முன்னேறி போகக்கூடிய ஒரு அற்புதமான காலகட்டம் வர போகிறது. திருமண வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்களும் விலகும். திருமண வரன் இவர்களுக்கு கைகூடி வரும்.
துலாம்:
துலாம் ராசிக்கு சனி பகவானின் இந்த வக்ர நிவர்த்தி பெயர்ச்சியானது இவர்கள் வாழ்வில் ஒரு வசந்தத்தை கொடுக்கப் போகிறது. இவர்கள் மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் விலகி மன நிம்மதியை பெற போகிறார்கள். நீண்ட நாட்களாக மன அழுத்தம் காரணமாக தூக்கமின்மையால் தவித்து வரும் துலாம் ராசியினர் இனி நன்றாக தூங்கக் கூடிய ஒரு பொன்னான காலமாக இருக்கப் போகிறது. இவர்களுக்கு வேலையில் நல்ல பாராட்டுக்களும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |