வேல்மாறல் படிக்கும்பொழுது மறந்தும் இந்த தவறை பண்ணாதீங்க
கலியுக வரதன் முருகப்பெருமான் கண்கண்ட தெய்வமாக இருக்கிறார். அவரை நாம் மனம் உருகி வழிபாடு செய்யும் பொழுது நம் ஆன்மாவும் மனதும் சுத்தம் அடைவதோடு வந்த துன்பம், வருகின்ற துன்பம் அனைத்தும் முருகன் அருளால் விலகி விடும். அப்படியாக, முருக பக்தர்கள் அனைவரும் அவருக்கு உரிய மந்திரங்களை பாடல்களை பாராயணம் செய்து வழிபாடு செய்வது உண்டு.
அவ்வாறு முருகப்பெருமானின் மந்திரங்களை பாராயணம் செய்து வழிபாடு செய்யும் பொழுது நாம் நினைத்த வேண்டுதல்கள் வெகு விரைவில் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்படியாக, முருகப்பெருமானின் மந்திரங்களை நாம் பாராயணம் செய்யும் பொழுது மறந்தும் சில தவறுகள் செய்யக்கூடாது என்கிறார்கள்.
குறிப்பாக வேல் மாறல் படிக்கும் பொழுது நாம் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் என்கிறார்கள். அந்த வகையில் நாம் முருகப்பெருமான் மந்திரங்களை பாராயணம் செய்யும் பொழுது என்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்? என்று முருகப்பெருமானைப் பற்றி பல்வேறு ஆன்மீக தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல பேச்சளார் விஜயகுமார் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |