2026: மகரத்தில் ராகு.. டிசம்பர் 5 முதல் இந்த ராசியினருக்கு வாழ்க்கையே மாறப்போகிறதாம்
ஜோதிட ரீதியாக கிரகங்கள் ஒவ்வொரு கால இடைவேளையில் அவர்களுடைய இடத்தை மாற்றுகிறார்கள். அப்படியாக, நவகிரகங்களில் சர்ப்ப கிரகங்களாக இருக்கக்கூடிய ராகு மற்றும் கேது உள்ளது.
பொதுவாக, சர்ப்ப கிரகங்கள் பெரிய அளவில் நன்மைகள் முதலில் செய்வதில்லை. ஆனால், அவர்கள் அமைந்துள்ள இடங்கள் பொறுத்து நமக்கு நன்மைகள் மாறுகிறது.
அந்த வகையில், டிசம்பர் 5ஆம் தேதி ராகு பகவான் மகர ராசிக்கும், கேது பகவான் கடக ராசிக்கும் பெயர்ச்சியாக இருக்கிறார்கள். திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் டிசம்பர் 5 சனிக்கிழமை அன்று மாலை 7.28 மணிக்கு ராகு பகவான் மகர ராசிக்கு செல்கிறார்.
மேலும், மகர ராசி சனி பகவானின் வீடாகும். அங்கு ராகு நுழைவது ஜோதிட ரீதியாக ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் ஒரு சில ராசிகளுக்கு கட்டாயமாக தொழில் ரீதியாக நல்ல மாற்றமும், வேலையில் முன்னேற்றம், லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி ஆகியவை பெற உள்ளார்கள். அவர்கள் எந்த ராசிினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சியானது இவர்களுக்கு வேலை மற்றும் தொழில் ரீதியாக ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது.
சொந்த தொழில் அல்லது வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு அவர்களுடைய சுய முயற்சியால் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தொழில் ரீதியாக நல்ல லாபத்தையும் பெற போகிறார்கள். பணியிடங்களில் அங்கீகாரம் கிடைக்கும். சிக்கலான சூழ்நிலையையும் சரியாக செய்து முடிப்பீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு ராகு பகவான் இந்த காலகட்டங்களில் பலவிதமான நன்மைகளை செய்யப் போகிறார். எதிரிகளையும் போட்டியாளர்களையும் வெல்லக்கூடிய வாய்ப்புகளை பெறப்போகிறீர்கள்.
இந்த காலகட்டங்களில் மாணவர்கள் கல்வி தொடர்பாக சிறந்த வாய்ப்புகளையும் போட்டி தேர்வுக்காக தயார் செய்யக்கூடிய மாணவர்களுக்கு நல்ல பொற்காலமும் அமையப்போகிறது. தைரியம் தன்னம்பிக்கை அதிகரித்து பாராட்டுகளை பெறுவீர்கள்.
மீனம்:
மீன ராசியினருக்கு இந்த காலகட்டம் வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட கருத்து மோதல் யாவும் விலகப் போகிறது. தொழில் ரீதியாக நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய பாதையால் உங்களுக்கான ஒரு அங்கீகாரத்தை பெறுவீர்கள்.
வேலைக்காக திடீர் வெளியூர் பயணம் அல்லது வெளிநாடு செல்லக்கூடிய யோகத்தையும் பெறுவீர்கள். பிள்ளைகள் வாழ்க்கையில் இருந்து வந்த தடை தாமதங்கள் யாவும் விலகும். பொன் பொருள் சேர்க்கை கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |