டிசம்பரில் 4 முறை நடக்கும் சுக்கிர பெயர்ச்சி- பிரம்மாண்டமாக வாழப்போகும் ராசிகள்
ஜோதிடத்தில் சுக்கிர பகவான் தான் ஒரு மனிதனுடைய செல்வ வளம், அதிர்ஷ்டம் அழகு, பிரம்மாண்டம் போன்றவற்றை குறிக்கக்கூடிய கிரகமாகும். வருகின்ற 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 முறை தனது இடத்தை சுக்கிரன் மாற்றுகிறா. இந்த மாற்றமானது எல்லா ராசிகளுக்கும் பல்வேறு விதமான தாக்கத்தை கொடுக்கப் போகிறது.
அதாவது டிசம்பர் 9 ஆம் தேதி சுக்கிர பகவான் அனுஷ நட்சத்திரத்தில் இருந்து கேட்டை நட்சத்திரத்திற்கு மாறுகிறார். பிறகு டிசம்பர் 19ஆம் தேதி சுக்கிரன் தெற்கு நோக்கி பயணம் செய்கிறார். அதோடு டிசம்பர் 20ஆம் தேதி விருச்சிக ராசியில் இருந்து வெளியேறி தனுசு ராசிக்கு செல்கிறார்.
கூடுதலாக டிசம்பர் 30ஆம் தேதி சுக்கிரன் மூல நட்சத்திரத்தில் இருந்து பூராடம் நட்சத்திரத்திற்கு மாறுகிறார். இந்த நான்கு மாற்றம் ஆனது குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு மிகவும் பிரம்மாண்டமான வாழ்க்கையை கொடுக்கப் போகிறது. அவர்கள் எந்த ராசிினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இந்த சுக்கிர பகவானுடைய மாற்றமானது அவர்களுடைய காட்டில் மழை என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் சந்தோஷத்தை மட்டுமே பார்க்கக்கூடிய மாதமாக இருக்கிறது. தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் இவர்களுக்கு கொண்டாட்டமாக தான் அமையப்போகிறது. நினைத்ததை உடனே சாதிக்க கூடிய ஆற்றலை இவர்களுக்கு சுக்கிரன் கொடுக்கப் போகிறார்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இந்த சுக்கிர பகவானுடைய மாற்றமானது அவர்களுக்கு நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி கொடுக்கப் போகிறார். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உருவாகும். சிலருக்கு வீடு கட்டக்கூடிய யோகம் கொடுக்கிறார். அதோடு இந்த காலகட்டங்களில் ஆடம்பரமான பொருட்களை இவர்கள் வாங்கி மகிழ போகிறார்கள். பொன் பொருள் சேர்க்கைக்கு பஞ்சம் இல்லாத நிலை இவர்களுக்கு உண்டு.
துலாம்:
துலாம் ராசியினருக்கு சுக்கிர பகவானுடைய இந்த மாற்றமானது நீண்ட நாள் இவர்கள் மனதில் இருக்கக்கூடிய கவலைகளை முதலில் சரி செய்கிறார். இவர்களுக்கு நிறைய பரிசுகளை கிடைக்கூடியகாலமாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியும் பாராட்டுக்களும் கிடைக்கும். திடீரென்று வீடுகளில் சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுக்கள் சாதகமாக அமையும். பொன் பொருள் சேர்க்கை கட்டாயம் இவர்களுக்கு உண்டு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |