கார்த்திகை அமாவாசையில் இந்த 5 விஷயங்கள் செய்தால் கடன் தொல்லை விலகுமாம்
12 மாதங்களிலும் வரக்கூடிய அமாவாசை தினம் என்பது மிகவும் முக்கியமான ஒரு தினமாக இருக்கிறது. இந்த நாளில் நம்முடைய முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதற்கான மிக அற்புதமான நாளாகும். மேலும், அமாவாசை நாட்களில் நாம் செய்யக்கூடிய வழிபாடுகள் பரிகாரங்கள் தானங்கள் இவை அனைத்தும் நமக்கு பல மடங்கு பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிலும் குறிப்பாக சில மாதங்களில் வரக்கூடிய அமாவாசை மிகச் சிறந்த பலன்களை கொடுக்கிறது. அந்த தினங்களில் நாம் தவறாமல் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்யும்பொழுது நிச்சயம் நம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை காணலாம். அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மிக மிக சிறப்பான நாளாக கருதப்படுகிறது.
இந்த 2025 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் அமாவாசை நவம்பர் 19ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. அன்றைய நாளில் நம்முடைய வீடுகளில் பொருளாதார கஷ்டங்கள் விலகி கடன் தொல்லை விரைவில் அடைய செய்ய வேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்களை பற்றி பார்ப்போம்.

1. கார்த்திகை மாதத்தில் புனித நீர்களில் நீராடுவது என்பது நமக்கு பலவிதமான நன்மைகளை பெற்றுக் கொடுக்கிறது. அந்த வகையில் அமாவாசை தினத்தன்று அதிகாலையில் எழுந்து நதிகளில் நீராடினால் நம்முடைய பாவங்களும் தோஷங்களும் விலகும். அவ்வாறு புனித நீர்களில் நீராட முடியாதவர்கள் வீடுகளில் இருக்கக்கூடிய புனித தீர்த்தத்தை குளிக்கும் நீரில் கலந்து அவர்கள் குளிக்கலாம் . அதோடு மிக முக்கியமாக அன்றைய தினம் காலையில் சூரிய பகவானுக்கு தண்ணீர் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
2. அமாவாசை அன்று மாலை வேளையில் சூரியன் மறைந்த பிறகு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த விளக்கை வீட்டு வாசலில் அல்லது துளசி செடிக்கு முன்னதாக வைத்து ஏற்றுவது மிகவும் சிறப்பாகும். இவ்வாறு விளக்கேற்றும் பொழுது நமக்கு சனி பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்களும் கஷ்டங்களும் விலகும்.
3. அமாவாசை நாளில் அரசமரத்தடியில் கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணையால் விளக்கேற்ற வேண்டும். இவ்வாறு விளக்கேற்றும் பொழுது நமக்கு பித்ரு தோஷம் இருந்தால் அவை விலகக் கூடிய ஒரு நல்ல பரிகாரமாக இது அமைந்து நம் வீடுகளில் மகிழ்ச்சியும் செல்வ வளமும் பெருகும்.

4. அமாவாசை நாட்களில் பெருமாளை வழிபாடு செய்வதால் நமக்கு மிகச்சிறந்த பலன் கிடைப்பதாக சொல்கிறார்கள். அன்றைய தினம் பெருமாளுக்கு துளசி இலைகள், மஞ்சள் நிற பூக்கள், சந்தனம், இனிப்பு வகைகளை படைத்து வழிபாடு செய்வது நன்மையாகும். மேலும் பெருமாளின் மந்திரங்களை 108 முறை சொல்லி நம் மனதில் உள்ள வேண்டுதலை வைத்தால் அவை விரைவில் நிறைவேறும்.
5. அமாவாசை அன்று மாலை நேரத்தில் மாவிளக்கு அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட விளக்கை நெய் அல்லது நலனை ஊற்றி ஏற்றுவது மிகச்சிறந்த நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கிறது. இந்த விளக்கை நதிக்கு எடுத்துச் சென்று ஓடும் தண்ணீரில் விட வேண்டும். இதனால் நம்முடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |