தேவ் தீபாவளி 2025: இந்த 3 ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறதாம்
இந்த ஆண்டு 2025 தேவ் தீபாவளி நவம்பர் 5ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்கு பிறகு சூரியனும் குருவும் இணையும் நேரம் ஒரு அதிசயமான மாற்றத்தை ஜோதிடத்தில் ஏற்படுத்துகிறது. குறிப்பாக பஞ்ச கிரக பலன்கள் ஒரு குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் யார் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இந்த தேவ் தீபாவளி நாளிலிருந்து அவர்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிலைக்கு செல்ல போகிறார்கள். இவர்கள் தொழில் ரீதியாக நீண்ட நாட்கள் காத்திருந்த ஒரு விஷயம் நடக்கப்போகிறது. வாழ்க்கை துணை இவர்களை புரிந்து கொண்டு எல்லா இடங்களிலும் உதவியாக இருப்பார்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.
கடகம்:
கடக ராசியினருக்கு தேவ் தீபாவளி பிறகு அவர்கள் வாழ்க்கையில் தொழில் ரீதியாக ஒரு மிகப்பெரிய மாற்றத்தை பெறப்போகிறார்கள். நீண்ட நாட்களாக கடன் பிரச்சனையில் இருந்தவர்களுக்கு அதில் இருந்து விடுபடக்கூடிய ஒரு அற்புதமான காலம் உருவாக போகிறது. திடீர் பணவரவால் இவர்களுடைய துன்பங்கள் அனைத்தும் விலகி மகிழ்ச்சியை பெற போகிறார்கள். இறை வழிபாட்டில் அதிக ஈடுபாடு செலுத்தக்கூடிய நிலை உருவாகும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இந்த தேவ் தீபாவளி நாளிலிருந்து அவர்களுடைய வாழ்க்கையில் எதையும் தெளிவாக அணுகக்கூடிய ஒரு நிலை உருவாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகக்கூடிய நிலை வரும். பிள்ளைகள் இவர்களுடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகித்து உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல போகிறார்கள். வெளிநாடு மற்றும் வெளியூர் சென்று மகிழ்ச்சியான நேரத்தை குடும்பத்துடன் செலவிடுகிறீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |