இரண்டில் குரு- குபேர பலம் பெறப்போகும் 3 முக்கிய ராசிகள்
ஜோதிடத்தில் குரு பகவான் ஒரு முக்கிய கிரகம் ஆவார். குரு பகவான் உடைய அருள் இருந்தால் அந்த நபர் கல்வியிலும் தொழிலிலும் சிறந்து விளங்குவார்கள். சமுதாயத்தில் நற்பெயருடன் நல்ல பொருளாதார நிலையில் இருப்பார்கள்.
உண்மை பேசும் நபராகவும் பிறரால் மதிக்க கூடிய மனிதராகவும் வாழ்வார்கள். அப்படியாக குரு பகவான் இரண்டாம் வீட்டில் சஞ்சரித்து வருகிறார். இதனால் சில ராசிகளுக்கு குபேர பலத்தை வழங்கக்கூடிய தன்மை உருவாகும்.
திடீர் மாற்றங்கள் அதிர்ஷ்டங்கள் வாய்ப்புகள் இவர்களை தேடி வர போகிறது. அப்படியாக இந்த அதிர்ஷ்டத்தை பெறப்போகும் மூன்று முக்கிய ராசிகள் யார் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பேச்சு வன்மை அதிகரிக்கும். தன்னுடைய அமோகமான சிந்தனையால் நினைத்ததை சாதிப்பார்கள். வீடுகளில் ஏற்பட்ட மன கசப்புகளை இவர்கள் சரி செய்வார்கள். இவர்கள் பேச்சை பிறர் கேட்டு மதித்து நடக்கக்கூடிய நிலை உருவாகும். திருமணம் விஷயங்களில் இவர்களுக்கு சாதகமான பலனை கொடுக்கு. செல்வமும் பெயரும் பெறப்போகும் காலமாகும்.
சிம்மம்:
குரு பகவானின் பார்வையால் சமுதாயத்தில் இவர்களுக்கு நற்பெயர் கிடைக்கப் போகிறது. சிலருக்கு சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும் காலமாகும். இவர்கள் கால் வைக்கும் இடமெல்லாம் வெற்றியை பெற போகிறார்கள். அரசாங்கம் சார்ந்த வேலையில் இவர்களுக்கு வெற்றி கிடைக்கப்போகிறது. வண்டி வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். மனதில் இருந்த பயம் விலகும்.
தனுசு:
தனுசு ராசிக்கு குருவின் இரண்டாம் வீட்டில் சஞ்சாரம் இவர்களுக்கு வாழ்க்கையில் மனதெளிவையும் மகிழ்ச்சியை கொடுக்கப் போகிறது. குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்வு சமுதாயத்தில் இவர்களுக்கான மதிப்பும் உயரப்போகிறது. சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உருவாகும். தொழில் செய்பவர்களுக்கு தங்களுடைய வளர்ச்சியை இன்னும் மேம்படுத்தக்கூடிய முக்கியமான காலகட்டமாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







