உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்க வேண்டுமா- இந்த ஒரு பரிகாரம் செய்யுங்கள்
வாழ்க்கை நிச்சயமற்ற ஒன்றுதான். ஆனால் அது சுவாரசியமானது. இங்கு பலருக்கும் துன்பமே இல்லாத வாழ்க்கை எதிர்பார்க்கிறார்கள். அங்கு தான் ஒரு வியப்பு உருவாகிறது. மனிதர்கள் வளரவே விரும்பாதவர்களா என்று?
ஒரு மனிதன் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அவனுக்கு ஒரு விஷயத்தை இந்த பிரபஞ்சம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் அவனுக்கு பல நேரங்களில் துன்பங்கள் வழியாகத்தான் செய்கிறது.
அந்த துன்பம் ஒரு மிக துயரமான காலமாக இருந்தாலும் ஒரு நாள் துன்பம் கட்டாயம் அதனுடைய வேலையை முடித்து விட்டு கிளம்பும் பொழுது நமக்கான ஒரு நல்வாழ்க்கையை கட்டாயமாக விட்டுச் செல்லும்.
அப்படியாக, மனிதர்கள் ஒரு நல்வாழ்வை வாழ வேண்டும் என்றால் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒரே ஒரு விஷயம் "பொறுமை". பொறுமை என்பது காத்திருப்பு அல்ல அது வளர்ச்சியை நோக்கிய பாதை. பொறுமை என்பது நம்மை மேம்படுத்தி நமக்கான காலத்திடம் கொண்டு சேர்க்கும் ஒரு வழி துணை. இதை அழகாக பகவத் கீதையில் நாம் பார்க்கலாம்.
பகவத் கீதையில் ஒவ்வொரு அத்தியாயமும் நம்மை வாழ்க்கையை பற்றிய புரிதலுக்கு மிக அழகாக கைபிடித்துக் கொண்டு செல்கிறது. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அவன் ஒவ்வொரு கட்டத்தையும் எவ்வளவு அழகாக அனுகி அவன் வாழ்க்கையை வாழ்ந்து கடமையைச் செய்ய வேண்டும் என்ற நமக்கு உணர்த்துகிறது.
பகவத் கீதையை புரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் பொறுமை கட்டாயம். ஆக எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் நீங்கள் நினைப்பது நடந்தாக வேண்டும் என்றால் அதற்கு "பொறுமை" தேவை.
இந்த பொறுமையை நாம் ஒரு சக்தி என்று சொல்லலாம் அல்லது ஒரு பரிகாரம் என்று எடுத்துக் கொள்ளலாம். பொறுமையாக செயல்பட்டவர்களும் பொறுமையாக இருந்து காரியம் நகர்த்தியவர்களும் தோற்றதாக சரித்திரமில்லை. இதற்கு மகாபாரதமும் ஒரு மிகப்பெரிய சான்று. அர்ஜுனனுக்கு தன்னுடைய சொந்தங்களிடம் போர் புரிய வேண்டும் என்ற எண்ணமே இல்லை.
பொறுமையாக இருந்தார். ஆனால் போர் தான் முடிவை தரும் என்று தெரிந்த பிறகு அவர் யுத்தத்தில் இறங்க தயங்கவில்லை. அர்ஜுனன் பொறுமையாகவும் நிதானமாகவும் தர்மத்திற்காக காத்திருந்த காரணத்தினால் தான் பெருமாளின் அருள் கிடைத்து அவன் வெற்றி பெற முடிந்தது.
ஆக நியாயமான பொறுமையும் வேண்டுதலும் நம் வாழ்க்கையில் இருக்க நிச்சயம் அந்த பகவான் நமக்கான வழியை காட்டுவார். நாம் நினைத்ததை நிறைவேற எவ்வளவு பெரிய முயற்சிகள் நாம் செய்தாலும் அதனுடன் சேர்த்து கட்டாயம் இருக்க வேண்டியது "பொறுமை" எனும் மிகச்சிறந்த சக்தி.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







