சாதாரண விஷயங்களுக்கும் அதிகம் பொய் பேசும் 3 ராசியினர்
ஜோதிடம் பொருத்தவரை ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒருவித தனி குணாதிசயங்கள் பெற்றிருக்கும். அதில் ஒரு சில ராசிகள் இயல்பாகவே சரளமாக பொய்யை உண்மையாக பேசும் பண்பு கொண்டிருப்பார்கள்.
அவர்கள் பேசுவது பொய்யா அல்லது உண்மையா என்று அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவர்கள் நம்மிடம் நடந்து கொள்வார்கள். அது அவர்கள் வேண்டுமென்றே செய்யும் ஒரு காரியம் இல்லை என்றும் சொல்லலாம்.
அவர்களை அவ்வாறு பேச வைப்பது செயல் படுத்துவது அவர்களுடைய சூழ்நிலையும் கிரகமும் கூட ஒரு காரணம். அப்படியாக எந்த ராசியினர் அதிக அளவில் பொய் பேசுவார்கள் என்று பார்ப்போம்.
மிதுனம்:
இவர்கள் இரட்டை தன்மையை கொண்டவர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப இவர்கள் தங்களுடைய வரைமுறைகளை மாற்றிக் கொள்வார்கள். சில நேரங்களில் பிறரை மகிழ்ச்சி படுத்துவதற்கும் பொய் சொல்வதுண்டு. அதை போல் தன்னை தற்காத்துக் கொள்ளவும் உண்மையை மறைத்து பொய் சொல்லக் கூடியவர்கள். இவர்கள் ஒரு பொய் சொல்லிவிட்டு அதை மறைப்பதற்கு பல பொய்கள் அடுக்கும் நிலை உருவாகிவிடும்.
துலாம்:
துலாம் ராசி பொருத்தவரை அவர்கள் தேவை இல்லாமல் பொய் சொல்வார்கள். மேலும் இவர்களுக்கு போய் சொல்வது பிடிக்காத ஒரு காரியம் என்றாலும் அவர்களால் பொய் சொல்வதை நிறுத்த முடியாது. இவர்கள் ஒருவருடைய அழைப்பை எடுக்கவில்லை என்றால் அதற்கான உண்மை காரணத்தை சொல்வதற்கு கூட தயங்குவார்கள். அதை மறைப்பதற்கு ஒரு பொய்யை சொல்வதில் இவர்கள் கில்லாடிகள்.
மீனம்:
இவர்கள் அவர்களுடைய நேரத்தை தனக்காக செலவழித்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இவர்களை ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கு அல்லது நண்பர்கள் கூட்டத்திற்கு ஒரு மகிழ்ச்சியான நேரத்தை செலவிட அழைக்கிறார்கள் என்றால் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு சில பொய்களை இவர்கள் கூறுவது உண்டு. அதேபோல் கால சூழ்நிலைகளை சரியாக சமாளிதக்க தேவையான இடங்களில் பொய் சொல்வதும் உண்டு. சமயங்களில் இவர்கள் சொல்லும் சிறு பொய் இவர்கள் வாழ்க்கையை திசை திருப்பி விடும் நிலை கூட வரலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







