கிருஷ்ண ஜெயந்தி 2025: அதிர்ஷ்டத்தை அள்ள போகும் 3 ராசிகள்
விஷ்ணுவின் தசாவதாரத்தில் எட்டாவது அவதாரமான கிருஷ்ண அவதாரம் நமக்கு வாழ்க்கை பாடங்களை போதித்த மிக முக்கியமான அவதாரமாகும். அந்த வகையில் கிருஷ்ண பகவான் பூமியில் உதித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி என்று ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றோம்.
இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்தி ஆனது ஆகஸ்ட் 16ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் கிருஷ்ண பகவானுக்கு பிடித்த உணவுகளை நெய்வேத்தியம் செய்து பூஜைகள் செய்து குழந்தைகளுக்கு கிருஷ்ணர் போல் வேடம் அணிந்து இந்த விழாவினை சிறப்பாக கொண்டாடுவார்கள்.
அப்படியாக இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாளில் புதாதீத்திய யோகம் கடக ராசியில் பிற்பகல் 2:00 மணி வரை இருக்கின்றது. அதோடு, சூரிய பகவான் இந்த நாளில் பிற்பகல் 2 மணிக்கு தனது ராசிக்குள் நுழைவார், அதே நேரத்தில் சந்திர பகவான் அன்றைய நாள் காலை 11:43 மணிக்கு தனது உச்ச ராசிக்குள் நுழைய உள்ளார்.
மேலும், விருத்தி யோகம் காலை 7:21 மணி வரை தொடரும், அப்போதுதான் துருவ யோகம் தொடங்கும். இந்த மாற்றத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு மிக பெரிய யோகம் உருவாக உள்ளது.
கன்னி:
கன்னி ராசியினர் வாழ்க்கையில் நல்ல மாறுதலை சந்திக்க உள்ளார்கள். குடும்பத்தில் இவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அதோடு, தொழில் மற்றும் வியாபாரத்தில் இவர்கள் நினைத்தப்படி நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணத்தில் சந்தித்த பிரச்சனைகள் விலகும். சிலருக்கு இரண்டாவது திருமணம் நல்ல வாய்புகளை தேடி கொடுக்கும். வியாபாரம் செய்ய மிக அதிர்ஷ்டமான நாள்.
தனுசு:
இவர்கள் குடும்பத்தில் சந்தித்த பிரச்சனைகள் நல்ல முடிவைப்பெறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். அவர்கள் உங்களை புரிந்து நடந்துகொள்வார்கள். உங்களை பற்றி தவறாக புரிந்து கொண்டவர்கள் உங்களிடம் வந்து பேசும் காலம் ஆகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம். வீடுகளில் மகிழ்ச்சியும் நிம்மதியும் பிறக்கும்.
கும்பம்:
நீங்கள் செய்யும் வேலையில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் உள்ள சங்கடங்கள் விலகும். வேலையில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் காலம் ஆகும். சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உருவாகும். தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்கும் காலம் ஆகும். வீடு கட்டும் ஆசை பலருக்கும் நினைவாகும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் காலம் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







