வீடுகளில் செய்வினை இருக்கின்றதா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?
செய்வினை என்பது மனிதர்களால் இன்றளவும் நம்பக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. ஒருவரை தன் வசம் கொண்டு வரவும், அல்லது அவர்களை தோற்கடிக்கவும் இந்த செய்வினை ஆனது செய்யப்படுகிறது. ஒருவருக்கு செய்வினை வைத்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை உடனடியாக சந்திக்க நேரும்.
அந்த வகையில் வீடுகளில் செய்வினை வைத்திருப்பதற்கான அறிகுறிகளை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதை பற்றி பார்ப்போம்.
ஆன்மீகத்தில் பல்லி ஒரு சிறப்பு வாய்ந்த உயிரினமாக பார்க்கப்படுகிறது. இந்த பல்லி ஆனது கட்டாயம் எல்லோர் வீட்டிலும் நாம் ஆங்காங்கே பார்க்க முடியும். ஆனால் ஒருவர் வீடுகளில் செய்வினை வைத்திருந்தால் அவர்கள் வீட்டில் பல்லி தங்காது. அதேபோல் செய்வினையால் பாதிக்கப்பட்டுள்ள வீட்டில் எப்பொழுதும் ஒரு துர்நாற்றம் இருப்பதை நாம் கவனிக்கலாம்.
அதே சமயம் எந்த பொருட்களை எடுத்தாலும் அவை கை தவறி கீழே விழுந்து கொண்டே இருக்கும். முக்கியமாக பூஜை தொடர்பான பொருட்கள் அடிக்கடி கை தவறி கீழே விழுவதை நாம் கவனிக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட ஆரம்பிப்பார்கள.
வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அடிக்கடி தலைவாசல் படியில் முட்டிக் கொள்வது அல்லது, தலை வாசலை நோக்கி செல்லும் பொழுது தடுமாற்றம் போன்றவை நடக்கும். எவ்வளவு தான் ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொண்டாலும் உடல் சோர்வாகவே காணப்படும்.
முக்கியமாக பூஜை அறையில் விளக்கேற்றினால் தீப சுடரானது நின்று எறியாமல் அலை மோதி கொண்டே இருக்கும். இவ்வாறான நிகழ்வுகள் சாதாரணமாக வீடுகளில் நடக்கக் கூடியது என்றாலும் செய்வினையால் பாதிக்கப்பட்ட வீட்டில் இவை சற்று அதிகமாக காணப்படும்.
செய்வினையால் பாதிக்கப்பட்டவர்கள் சரண் அடைய வேண்டிய தெய்வம் காளி தேவி. அவளை சென்று வழிபாடு செய்தால் உடனடியாக நாம் செய்வினையில் இருந்து விடுபடலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







