12 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் லட்சுமி நாராயண யோகம்-கோடீஸ்வர யோகம் யாருக்கு?
ஜோடித்திட சாஸ்திரப்படி சுக்கிரன் லட்சுமியின் வடிவமாக கருதப்படுகிறது.புதன் நாராயணனின் வடிவமாக கருதப்படுகிறது.இந்த சூழல் இரண்டு கிரகங்கள் ஒன்று சேர்வதால் லட்சுமி-நாராயண யோகம் உருவாகிறது.இந்த லட்சுமி நாராயணன் யோகம் மிக பெரிய திருப்பத்தை வாழ்வில் உண்டாக்கும்.
ஒருவருக்கு லட்சுமி நாராயணன் யோகம் உண்டாக அவர்களுக்கு நீண்ட நாள் இருந் கடன் நிறைவேறும்.எதிர்பாராத நேரத்தில் அவர்களின் மனக்கவலைகள் குறையும்.மேலும்,வருகின்ற 2025ஆம் ஆண்டு புத்தாண்டின் தொடக்கத்திலேயே லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது.
அதனால் ஜனவரி மாதம் 28-ம் தேதி மீன ராசியில் சுக்கிரன் நுழைகிறார். அதற்கு அடுத்த மாதத்தில் அதாவது பிப்ரவரி மாதம் 27-ம் தேதி மீனத்தில் புதன் சஞ்சரிக்கிறார்.இந்த யோகமானது 69 நாட்கள் நீடிக்கவுள்ளது.
இதனால் புத்தாண்டு தொடங்கி இரண்டு மாதங்களுக்கு மூன்று ராசியினர் தங்கள் வாழ்வில் சந்தித்த கஷ்டங்கள் விலகி அதிர்ஷடத்தை சந்திக்க உள்ளார்கள்.அதை பற்றி பார்ப்போம்.
மீனம்:
மீன ராசியின் முதல் வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. மீன ராசியினர் வெகு காலமாக அவர்கள் சில பிரச்சனைகள் சந்தித்து வருகின்றனர்.அவை எல்லாம் இன்னும் சிறிது காலத்தில் முற்றிலுமாக விலக உள்ளது.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.வாங்கிய கடன்கள் எல்லாம் அடைக்கும் யோகம் உருவாகும்.அரசு பணியில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர்,பதவி உயர்வு கிடைக்கும்.சமுதாயத்தில் நல்ல மதிப்பு உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசியின் 2-வது வீட்டிற்கு லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது.இதனால் இந்த ராசிக்காரர்கள் அவர்கள் வியாபாரத்தில் நல்லதொரு மாற்றத்தை சந்திப்பார்கள்.உங்கள் புத்தி கூர்மையால் நினைத்ததை சாதிப்பீர்கள்.
புதிய வேலை,தொழில் தொடங்க நல்ல காலம் இது.எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.இடம் மாற்றம் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.சொத்து விவகாரத்தில் உண்டான பிரச்சனை விலகும்.வெற்றியை சந்திக்க போகிறீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசியின் 10-வது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது.பிறர் பேச்சை கேட்டு சிக்கலில் மாட்டிக்கொண்ட உங்களுக்கு பிரச்னையில் இருந்து விடுதலை கிடைக்கும்.உயர்பதவிகள் சம்பள உயர்வு கிடைக்கும்.சொத்து வாங்கும் யோகமும்,விற்கும் யோகமும் கிடைக்கும்.
அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயர் உண்டாகும்.இறைவழிபாட்டில் உங்கள் முழுமனதை செலுத்துவீர்கள்.பிரிந்து சென்ற தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.நகை மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |